Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
படப்பிடிப்பில் விபத்து... தோள்பட்டையில் பலத்த காயம்.. பிரபல நடிகருக்கு அமெரிக்காவில் திடீர் ஆபரேஷன்!
சென்னை: பிரபல நடிகரின் தோள்பட்டை காயத்துக்காக, அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
வினயன் இயக்கத்தில் பிரதீப், சனுஷா நடித்த நாளை நமதே படத்தில் நடித்திருந்தவர் தெலுங்கு ஹீரோ ஷர்வானந்த்.
தொடர்ந்து சரவணன் இயக்கிய 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது.

ஜேகே எனும்
அடுத்து சேரன் இயக்கிய 'ஜேகே எனும் நண்பனின் கதை' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ஷர்வானந்த், தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான '96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். ஜானு என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை, தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கி இருந்தார்.

தோளில் காயம்
த்ரிஷா கேரக்டரில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் ஹிட்டான அளவுக்குத் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை. பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து கீரவானி, ஶ்ரீகரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், நடிகர் ஷர்வானந்த். இவர் ஜானு படத்தில் நடித்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

அறுவை சிகிச்சை
அதற்கு அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால், காயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஓய்வு எடுக்கிறார்
'சமீபத்தில், ஷர்வானந்த் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரது தோளில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது ஓய்வு எடுத்து வருகிறார். இன்னும் ஒரு வாரம் கழித்து இந்தியா திரும்புவார் என்று அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கரோனா வைரஸ் காரணமாகப் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்தி அவர் ஓய்வு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.