சாதி பெயரை நீக்கிவிட்டால் நல்லவராகிவிட மாட்டீங்க.. சம்யுக்தாவை பங்கமாக கலாய்த்த பிரபலம்!

சென்னை : சாதி பெயரை நீக்கிவிட்டால் மட்டும் நீங்கள் நல்லவராகி விட மாட்டீங்க என்று நடிகை சம்யுக்தாவை பிரபல நடிகர் பங்கமாக விமர்சித்துள்ளார்.

வாத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Actor shine tom chacko Criticized samyuktha menon

நடிகை சம்யுக்தா : வாத்தி பட ப்ரோமோஷனின் போது நடந்த சம்பவம் செய்தியாகவும் விவாதமாகவும் மாறியது. முழு ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டும் என்பதற்காக இந்த விவாதம் நடப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அந்த விவாதத்தைக் கொண்டு வருவதில் நானும் ஒரு பங்கு வகிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் கூறியுள்ளார்.

பட ப்ரோமோஷனுக்கு வரல: தற்போது, இவர் பூமராங் என்ற மலையாளப்படத்தில் ஷைன் டாம் சாக்கோவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன்களில் சம்யுக்தா கலந்து கொள்ளாதது வருத்தமளிப்பதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய, படத்தின் கதாநாயகன் ஷைன் டாம் சாக்கோ, ​​​​ஒருவரால் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாததை என்னவென்று சொல்வது.

Actor shine tom chacko Criticized samyuktha menon

நல்லவராகிவிட மாட்டீர்கள் : பெயரை மட்டும் மாற்றிவிட்டால் நீங்கள் நல்லவராகிவிட மாட்டீர்கள். ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நீங்கள் நாயர், மேனன், கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என எந்த மதமாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் முதலில் சக மனிதர்களைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று சம்யுக்தாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

காயப்படுத்திவிட்டது : நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் பேச்சால் டென்ஷனான சம்யுக்தா, ஷைன் டாம் சாக்கோ சொன்ன கருத்து என்னை காயப்படுத்தி விட்டது. எனது சாதிப் பெயரை நீக்குவது தொடர்பான முடிவை மிகவும் முற்போக்கான முறையில் எடுத்தேன். இதனால், உடனேயே மக்கள் என்னை சாதிப் பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்தமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும் இருந்தாலும், காலப்போக்கில் அது மாறிவிடும் என்ற நம்பிக்கையால் அப்படி சொன்னேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X