Don't Miss!
- News
இலங்கையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்- உற்சாக வரவேற்பு- தமிழ் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சு!
- Automobiles
யூஸ்டு மார்கெட்டின் சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம்... செகண்ட் ஹேண்டில் வாங்க மிக சிறந்த 5 சிறிய கார்கள்!
- Lifestyle
Today Rasi Palan 20 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...
- Sports
தேவையில்லாமல் போசாதே.. உன் வேலையை மட்டும் பார்.. சர்பிராஸ் கானுக்கு தேர்வுக்குழுவினர் எச்சரிக்கை
- Finance
ஹெச்யுஎல் நிறுவனத்தின் நிகரலாபம் 12% அதிகரிப்பு.. ஆனா பங்கு விலை மட்டும் சரிவு..!
- Technology
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
படப்பிடிப்பு தளத்தில் அடிதடி தள்ளுமுள்ளு… நடிகர் மீது புகார் !
கொச்சி : டோவினோ தாமஸ் நடித்து வரும் "தள்ளுமாலா" படப்பிடிப்பின் போது பொதுமக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது.
மின்னல் முரளி படத்தில் சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டிஇருந்த டோவினோ தாமஸ் இயக்குனர் காலிக் ரஹ்மான் இயக்கத்தில் தள்ளுமாலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் டோவினோவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்து வருகிறார்.

தள்ளுமாலா படத்தின் திரைக்கதையை எழுத்தாளர்கள் முஹ்சின் பராரி மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் எழுதியுள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைக்க, அனுராகா கரிக்கின் வெல்லம், கப்பேலா, லவ் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.

தள்ளுமாலா திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியை அடுத்த களமச்சேரியில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், படப்பிடிப்பு நடைபெற்றதால், சாப்பாட்டு தட்டு, டீ கிளாஸ் போன்றவை அந்த பகுதியில் அதிகம் வீசப்பட்டு இருந்தன.

இதனால் ,படப்பிடிப்பு தளத்தை சுற்றி குப்பைமேடாக காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தை முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடைசியில் கைகலப்பாகி விட்டது. அப்போது நடிகர் ஷான் டோம் சாக்கோ ஒருவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் சமரசமாக பேசி கூட்டத்தைகளைத்தனர்.