ஊரு முழுக்க இப்போ இந்த காய்ச்சல் தான்.. என்கேபி பார்க்க யாரெல்லாம் லீவு கேட்டுருக்காங்க பாருங்க!

Recommended Video

Nerkonda Paarvai Public Opinion | Nerkonda Paarvai | Ajith Kumar | Shraddha Srinath | H Vinoth

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி, ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற பிங்க் என்ற படம் தான் தமிழில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆகியுள்ளது.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று ரிலீஸாவதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்.

இதற்கான டிக்கெட் முன்பே விற்று தீர்ந்துவிட்டது. நேற்று முன்தினம் படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் நடைபெற்றது. இதனை பார்த்தவர்கள் படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

லீவு கேட்ட மாணவர்

லீவு கேட்ட மாணவர்

பிங்க் படத்தைக் காட்டிலும் நேர்கொண்ட பார்வை படத்தில் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் கல்லூரி மாணவர் ஒரு ஆசிரியரிடம் லீவு கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்.

ஒரே கோடு

அதனை பார்த்த பேராசிரியர் கடிதத்தின் குறுக்கே ஒரே கோடாக போட்டு, பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தல காய்ச்சல்

இதனிடையே நடிகர் சிரிஷ் சரவணன் தமக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாவதால், தமக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் தான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள்

நடிகர் சிரிஷ் சரவணன் மெட்ரோ , ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். லீவு கொடுக்காவிட்டால் சொல்லுங்கள் அலப்பறை பண்ணிடலாம் என்கிறார் இந்த ரசிகர். நடிகர்கள் பலரும் அஜித்துக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X