வந்தாச்சு வாரிசு: அப்பாவான அகில உலக சூப்பர் ஸ்டார்

By Siva

சென்னை: அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக ஆனவர் சிவா. அவருக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து ரசிகர்கள் அழகு பார்த்துள்ளனர். யாரையாவது சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால் கோபப்படும் ரஜினி ரசிகர்கள் கூட சிவாவை ஒன்றும் சொல்வது இல்லை.

 Actor Shiva has become a father

சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் ஸ்டைல் தான் நினைவுக்கு வரும் ஆனால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே தன்னால் குபீர் என்று சிரிப்பு வரும். அது தான் அவரின் சிறப்பு. டான்ஸ் ஆடுவதில் பிரபுதேவாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார் நம்ம சிவா.

சரி விஷயத்திற்கு வருவோம். சிவா கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பேட்மிண்டன் வீராங்கனையான ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஜித் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து பேட்மிண்டன் ஆடினவர் ப்ரியா. கர்ப்பமாக இருந்த ப்ரியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ப்ரியா நேற்று மதியம் குழந்தை பெற்றுள்ளார். தாயும், சேயும் நலமாக உள்ளனர். குட்டி சூப்பர் ஸ்டாருக்கு அகஸ்தியா என்று பெயர் வைத்துள்ளனர். சிவா தந்தையான விஷயம் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிவா தற்போது வணக்கம் சுமோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சி. எஸ். அமுதன் இயக்கத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான தமிழ் படம் 2 நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் 3ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அமுதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, அமெரிக்கா, இங்கிலாந்து என்று பல இடங்களில் அரசியல் தொடர்பாக எது நடந்தாலும் அமுதனுக்கு கான்செப்ட் கிடைத்துவிட்டது என்கிறார்கள் ரசிகர்கள். தமிழ் படம் 3 எடுத்தால் அதில் யார், யாரை எல்லாம் மரணமாக கலாய்க்கப் போகிறார்களோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X