Shiva rajkumar: ரோலக்ஸ் கேரக்டரோட என்னோட கேரக்டரை கம்பேர் பண்றாங்க.. சிலிர்த்த சிவராஜ்குமார்!

சென்னை: நடிகர் சிவராஜ்குமார் தமிழில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிவராஜ்குமார். இதையடுத்து தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களே சிவராஜ்குமார் நடித்துள்ளார். ஆனாலும் இந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Actor Shiva rajkumar hails his character in Jailer movie in his recent interview

ரோலக்ஸ் கேரக்டருடன் தன்னுடைய ஜெயிலர் பட கேரக்டரை ரசிகர்கள் கம்பேர் செய்வதாக சிவராஜ்குமார் சிலிர்ப்பு: நடிகர் சிவராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்துள்ளனர். இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இவருக்கு எராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் மற்றும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் என்ற அளவிலும் இவர் அதிகமான கவனத்தை பெற்றுள்ளவர். கன்னடத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் இவர் தற்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படத்தில் இவரது போர்ஷன்கள் சில நிமிடங்களே வந்தாலும் சர்வதேச அளவில் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. படத்தில் ரஜினியை தொடர்ந்து, சிவராஜ்குமார் மற்றும் படத்தின் வில்லன் விநாயகன் அதிகமாக கவனத்தை பெற்றுள்ளனர். குறிப்பாக படத்தில் சிவராஜ்குமாரின் போர்ஷன்கள் 10 நிமிடங்களே வந்த நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய ஸ்டைலால் கவர்ந்துள்ளார்.

இதனிடையே ஜெயிலர் படம் தன்னை சர்வதேச அளவில் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளதாக சிவராஜ்குமார் தனது சமீபத்திய பேட்டியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னைக்கு சென்றாலும் ஐதராபாத், அமெரிக்கா, துபாய் போன்ற இடங்களுக்கு சென்றாலும் ரசிகர்கள் தன்னை ஜெயிலர் படத்தின்மூலம்தான் அடையாளப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, அங்கு 400 தமிழர்கள், தன்னை அடையாளம் கண்டுகொண்டு, தன்னுடன் அதிகமான அளவில் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Actor Shiva rajkumar hails his character in Jailer movie in his recent interview

தன்னுடைய உதவியாளர்கள், இதையெல்லாம் உபத்திரவாக கருதியநிலையில், தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் தனக்கு மிகச்சிறந்த ரீ என்ட்ரியை கொடுத்துள்ளதாகவும், தான் ஒரு படத்தில் 80 காட்சிகளில் எல்லாம் நடித்துள்ள போதிலும், அதனால் கிடைக்காத அதிகப்படியான வரவேற்பை இந்தப் படம் கொடுத்துள்ளதாகவும், இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தன்னுடைய மனைவியும் தன்னிடம் கேட்பதாகவும் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

ஜெயிலர் படம் மற்றும் அதன் நரசிம்மா கேரக்டர் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியுள்ளதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். இந்த கேரக்டரை விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் படத்தின் கேரக்டருடன் ரசிகர்கள் ஒப்பிட்டு தன்னை பாராட்டுவதாகவும் சிவராஜ்குமார் கூறியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பரில் ரிலீசாகவுள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் சிவராஜ்குமாரின் கேரக்டர் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X