நடிகர் சிவக்குமாரின் பேச்சு! - கோபத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்கள்

சென்னை : மார்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார், தற்போது நடிப்பதை தவிர்த்து வந்தாலும், மகாபாரதம், கம்பராமாயணம் உள்ளிட்ட புராணங்கள் குறித்து அவ்வபோது கல்லூரிகளில் பேசி பாராட்டு பெற்று வருவதோடு, மாணவர்களுக்கு உடல் நலத்தை காப்பது குறித்து விழுப்புணர்வும் ஏற்படுத்துகிறார்.

உடற்பயிற்சி, யோகா பயிற்சி போன்றவைகள் மூலம் 80 வயதை கடந்த பிறகும் ஆக்டிவாக இருக்கும் சிவக்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரது செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். தற்போது இந்த பிரச்சினை குறித்து மக்கள் மறந்துவிட்டாலும், சில திரைப்படங்களில் காமெடிக்காக இந்த சம்பவத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

Actor Shivakumars talk! - Shivaji Ganeshans fans was angry

ஹீரோவாக நடிக்கும் போது எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காத சிவக்குமார், நடிக்காமல் இருக்கும் போது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியது, அவர்களது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு பெரும் வருத்தத்தை கொடுத்த நிலையில், தற்போது புதிய சர்ச்சையில் நடிகர் சிவக்குமார் சிக்கியுள்ளார்.

Actor Shivakumars talk! - Shivaji Ganeshans fans was angry

சென்னையில், நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சிவக்குமார், நம்பியாருடன் இணைந்து நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ஒரு படத்தில் நம்பியாரின் நடையை பார்த்து தான் பிரமித்து போனதாக தெரிவித்த சிவக்குமார், அந்த ராஜ நடையை சிவாஜியால் கூட நடக்க முடியாது. பொதுவாக கம்பீரமான நடைக்கு சிவாஜியை தான் உதாரணமாக சொல்வார்கள். ஆனால், நம்பியாரின் நடைக்கு முன்னாள் சிவாஜியின் நடை சாதாரணமானது. அப்படி ஒரு ராஜநடை நடப்பார், என்று கூறினார்.

Actor Shivakumars talk! - Shivaji Ganeshans fans was angry

நம்பியாரின் நூற்றாண்டு விழாவில் சிவாஜி ரசிகர்களும் பலர் கலந்துக் கொண்டனர். குறிப்பாக சிவாஜி குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் இயக்குநர் பி.வாசு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர்களுக்கெல்லாம் சிவக்குமாரின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Actor Shivakumars talk! - Shivaji Ganeshans fans was angry

நம்பியார் போல வில்லன் வேடத்தை யாராலும் கையாள முடியாது, என்று சிவக்குமார் கூறியிருக்கலாம், ஏன், நம்பியாரின் நடை கம்பீரமாக இருக்கும், என்று கூட அவர் கூறியிருக்கலாம், அதை விட்டுவிட்டு, சிவாஜியால் கூட அப்படி நடக்க முடியாது, என்று எதற்காக கூற வேண்டும், எதற்கு சிவாஜியை இழுக்க வேண்டும், என்று சிவாஜி ரசிகர்கள் நடிகர் சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Actor Shivakumars talk! - Shivaji Ganeshans fans was angry
Actor Shivakumars talk! - Shivaji Ganeshans fans was angry

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X