சுரேஷ் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல.. அந்த நாட்கள மறந்துடாதீங்க அர்ச்சனா.. எச்சரிக்கும் பிரபல நடிகர்!

சென்னை: சுரேஷை மொட்டை மொட்டை என்று பேசிய அர்ச்சனாவை பிரபல நடிகர் விளாசியுள்ளார். மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி குறித்தும் பெல அரிய தகவர்களை கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் சுரேஷ் சக்கரவர்த்தி. மமுட்டியின் அழகன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியாவில் ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். சக்ஸ் கிட்சன் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

வயதில் மூத்தவர்

வயதில் மூத்தவர்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிர் பங்கேற்றுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே வயதில் மூத்தவர் என்றால் சுரேஷ் சக்கரவர்த்திதான்.

மல்லுக்கு நிற்கிறார்கள்

மல்லுக்கு நிற்கிறார்கள்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலருக்கு அநத் ஞாபகமே இல்லை. அவரின் வயதுக்கு கூட மரியாதைக் கொடுக்காமல் ரொம்பவே மோசமாக நடந்து வருகிறார்கள். குறிப்பாக அனிதா சம்பத், ரியோ ராஜ், சனம் ஷெட்டி போன்றவர்கள் எதற்கெடுத்தாலும் அவரிடம் மல்லுக்கு நிற்கிறார்கள்.

கூடும் மதிப்பு

கூடும் மதிப்பு

அவரைப் பற்றி பின்னால் பேசுவது, அவரை டார்கெட் செய்வது என மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். ஹவுஸ்மேட்ஸ் அவரை டார்கெட் செய்ய செய்ய அவர் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் கூடிக்கொண்டே போகிறது.

ஓவர் பேச்சு

ஓவர் பேச்சு

போதா குறைக்கு வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ள அர்ச்சனா, வார்த்தைக்கு வார்த்தை மொட்டை மொட்டை என்றும் நீ போ வா என்றும் பேசி வருகிறார். ஏற்கனவே அர்ச்சனா ஓவர் ஆக்ட்டிங் செய்து வருகிறார் என்று பேச்சு உள்ள நிலையில் அவரது இந்த நடவடிக்கை ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியுள்ளது.

அரிய தகவல்கள்

அரிய தகவல்கள்

இந்நிலையில் நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகை சுஜா வருணியின் கணவருமான சிவ குமார் அர்ச்சனா சுரேஷிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதை பார்த்து விளாசியுள்ளார். மேலும் சுரேஷ் குறித்த சில அரிய தகவல்களையும் கூறியுள்ளார்.

பழசை மறக்கக்கூடாது

பழசை மறக்கக்கூடாது

சிவகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, திரு.கலாநிதி மாறனை நேராக அணுகிய சிலரில் திரு.சுரேஷும் ஒருவராக இருந்தார்! அவர்களின் ஆரம்ப நாட்களில் சன்நெட்வொர்க்கின் தலைமை மேற்பார்வையாளர்களில் ஒருவரான திரு.சுரேஷ் & பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்தவர்! திருமதி.சந்தோக் அல்லது அவரது பெயர் எதுவாக இருந்தாலும் அவரது "காமெடி டைம்" நாட்களை மறந்துவிட்டதாக நினைக்கிறேன்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X