எவிக்ட்டான சுரேஷ்.. நீங்கள் எப்போதும் தகுதியானவர் மாமா.. உருகும் பிரபல நடிகர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி எவிக்ட்டானது குறித்து பிரபல நடிகர் உருக்கமாய் டிவிட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதல் நேர்மையாகவும் சுவாரசியமாகவும் விளையாடியவர் சுரேஷ் சக்கரவர்த்தி.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று மூன்றாவது நபராய் வெளியேறினார். அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

நானாக அனுப்பவில்லை
சுரேஷ் சக்கரவர்த்திக்கு விடை கொடுத்த பிறகு பிக்பாஸ் மேடையில் பேசிய கமல், நானாக அனுப்பவில்லை. நான் வெளியே அனுப்பியதாக வெளியாகும் தகவலை நம்பாதீர்கள். ஒரு முடிவு மற்றொன்றின் தொடக்கமாக இருக்கலாம்.

சுரேஷாகவும் இருக்கலாம்
அவர் வெளியே செல்வதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம்.. சுரேஷாகவும் இருக்கலாம்.. என்ன என்று விவாதியுங்கள்.. என்றார் கமல். இதனைக் கேட்ட ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி தானாகதான் வெளியேறி இருக்கிறார் என்றும் இதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என்றும் கூறி வருகின்றனர்.

சுரேஷ் குறித்து டிவிட்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஃபாலோ செய்து வரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான ஷிவகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியது குறித்து டிவிட்டியுள்ளார்.

பெருமைபடுகிறேன்..
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சுரேஷ் மாமா இந்த சீசனில் ஒரு சுவாரஸ்யமான தொடக்கத்தை நீங்கள் கொடுத்தது அனைவருக்கும் தெரியும்!! எதுவாக இருந்தாலும் நீங்கள் உங்கள் விளையாட்டை நன்றாக விளையாடியுள்ளீர்கள், நான் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன் !! வாருங்கள் மாமா, நீங்கள் எப்போதுமே அதிக தகுதி உடையவர், பார்ட்டி பண்ணலாம் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











