Shivaraj kumar: ரகுவரன் சகோதரருக்கு படவாய்ப்பு.. கை கொடுத்த சிவராஜ்குமார்!

சென்னை: நடிகர் ரகுவரன் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் தன்னுடைய 49வது வயதில் ரகுவரன் உயிரிழந்தார். இவரது இழப்பு கோலிவுட்டில் தீர்க்க முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவரது சகோதரர் ரமேஷ்வரன், ரகுவரன் குறித்து பல விஷயங்களை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Actor Shivaraj kumar assure to give chance in his next movie to Raghuvaran brother

ரகுவரன் சகோதரருக்கு நடிக்க சான்ஸ் கொடுப்பதாக சிவராஜ்குமார் உறுதி: நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருந்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். வில்லனாக மட்டுமில்லாமல் கேரக்டர் ரோல்களிலும் இவர் சிறப்பான நடிப்பை கொடுத்தவர். இவர் கடந்த 2008ம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த நிலையில், இவரது இழப்பு தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரோகுணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரகுவரன். இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். இவர்களது குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே அமைந்ததாகவும் ஆனால் சில மனவருத்தங்களால் இவர்கள் பிரிந்ததாகவும் சமீபத்திய பேட்டியில் ரகுவரனின் சகோதரர் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார். ரகுவரனின் கடைசி படமான யாரடி நீ மோகினி படம் குறித்து அவர் பகிர்ந்துக் கொண்டார்.

இந்தப் படத்தில் தனுஷின் தந்தையாக நடித்திருந்தார் ரகுவரன். படத்தின் கதை பிடித்ததாலும் தனுஷ் இந்தப் படத்தில் தன்னுடைய மகனை நினைவுப்படுத்தியதாலும் இந்தக் கதையில் ரகுவரன் நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரகுவரன் உயிரிழந்துவிட்டார். இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்த ரகுவரன், தொடர்ந்து சோர்வாகவேஇருந்ததாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Actor Shivaraj kumar assure to give chance in his next movie to Raghuvaran brother

அளவிற்கு அதிகமான மது அருந்தியதால் ரகுவரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரகுவரனின் அதிகமான மன அழுத்தமும அவரது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்ததாக ரமேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ரகுவரன் குறித்த ரமேஷ்வரனின் பேட்டிகள் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சிவராஜ்குமாரை சந்தித்து ரமேஷ்வரன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த வீடியோவின் ரகுவரனின் தனிப்பட்ட நடிப்பு குறித்து சிவராஜ்குமார், ரமேஷ்வரனிடம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ரகுவரனைப் போல வலிமையான கேரக்டர்களை எடுத்து நடிப்பது எளிதானதல்ல என்றும் கூறியுள்ளார். இதனிடையே ரமேஷ்வரனுக்கு தன்னுடைய அடுத்தப்படத்தில் நடிக்க சான்ஸ் கொடுப்பதாகவும் சிவராஜ்குமார் உறுதி அளித்துள்ளார். 100 சதவிகிதம் இது நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: shivaraj kumar raghuvaran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X