Shivaraj kumar: ரசிகர்கள் தொந்தரவு கர்வத்தை கொடுக்கிறது.. சிவராஜ்குமார் உற்சாகம்!
சென்னை: நடிகர் சிவராஜ்குமார் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் ஆனந்த் என்ற படத்தின்மூலம் இவரது சினிமா என்ட்ரி துவங்கிய நிலையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது ஸ்டைல் ஜெயிலர் படத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. கன்னட ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் சிவராஜ்குமாரை கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் தொந்தரவு கர்வத்தை கொடுப்பதாக சிவராஜ்குமார் உற்சாகம்: நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் ஆனந்த் என்ற படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மூத்த மகன் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய சிறப்பான திறமையால் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். சிவாண்ணா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். கன்னடத்தில் மட்டுமில்லாமல் தற்போது தமிழ், மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் தன்னுடைய பாடி லேங்குவேஜால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஜெயிலர் படத்தில் இவரது மாஸான நடிப்பு கன்னட ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் டிஸ்யூ பேப்பரை ரம்யா கிருஷ்ணனிடம் தள்ளும் ஒரு காட்சியில் அதிகமான கைத்தட்டல்களை பெற்றுள்ளார் சிவராஜ்குமார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது. குதிரையில் இவர் வரும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பிரித்விராஜ் இயக்கத்தில் டைசன் படத்தில் நடித்து வருகிறார் சிவராஜ்குமார்.
அடுத்ததாக சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் உருவாகியுள்ளது கோஸ்ட் படம். இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில்தான் விஜய்யின் லியோ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கோஸ்ட் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ள நிலையில், விஜய்யுடன் இந்தப் படம் மோதவுள்ளது மேலும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது.

இதனிடையே தமிழில் அதிகமான பேட்டிகளை கொடுத்துவரும் சிவராஜ்குமார், தான் தான் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வருவதாகவும் திடீரென சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிய கடையில் சாப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார். அப்படி சாப்பிடும்போது ரசிகர்களின் தொந்தரவு இருக்கும் என்று கூறியுள்ள அவர் ஆனால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். ரசிகர்களின் அந்த தொந்தரவில் பெருமை, சந்தோஷம், திமிர் இவற்றை தான் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











