Shivaraj kumar: நான் படத்துல 10 நிமிஷம்தான் வருவேன்.. ஜெயிலர் குறித்து சிவராஜ்குமார் வெளிப்படை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் ஜெயிலர்.
படத்தில் சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கிஷெராப் போன்றவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் நேற்று முன்தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஜெயிலர் படத்தில் 10 நிமிடங்களே வரும் சிவராஜ்குமார்: அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
படத்தில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். அவர் வில்லன்களால் கடத்தப்பட அவரை மீட்கும் நடவடிக்கையில் ரஜினி ஈடுபடுவதாக கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் படையப்பா படத்திற்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், அவரது இசையில் வெளியான காவாலா, ஹுகும், ஜுஜுபி போன்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
படத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ஒரு பாடலை எழுதியுள்ளார். ரஜினிக்கு என்றால் அனிருத் அதிகமான மெனக்கெடலுடன் இசையமைப்பார் என்று இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய சிவராஜ்குமார், ரஜினி தனக்கு சித்தப்பா போன்றவர் என்று நெகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார். சிறுவயதில் தன்னுடைய தந்தையுடன் சபரிமலைக்கு போகும்போது, ரஜினியின் கைகளை பிடித்துக் கொண்டு சென்ற சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்திருந்தார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் தன்னுடைய போர்ஷன்கள், 10 முதல் 11 நிமிடங்கள் மட்டுமே வரும் என்று அவர் கூறியுள்ளார். படத்தில் நடித்தது தனக்கு சொர்க்கத்தில் இருப்பதை போன்று ஃபீலிங்கை கொடுத்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பல உடல்நலக் கோளாறுகள் இருந்தபோதிலும் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் சுறுசுறுப்பு, நடிப்பின் மீது அவருக்கிருந்த ஈடுபாட்டை காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
சின்ன சின்ன காட்சிகளிலும் சிறப்பாக செயல்பட்ட நெல்சனின் டெடிகேஷன் மிகவும் சிறப்பாக இருந்ததை சுட்டிக் காட்டிய சிவராஜ்குமார், சிறிய கேரக்டர்களுக்கும் அவர் கொடுத்திருந்த முக்கியத்துவம் மிகவும் அழகானது என்றும் கூறினார். தான் படத்தின் கதையை கேட்க கூட விரும்பவில்லை, இந்தப் படத்தில் நடித்தால் போதும் என்ற மனநிலையே தனக்கு இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் தன்னை உட்கார வைத்து தனக்கு கதையை முழுமையாக நெல்சன் விவரித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.


Click it and Unblock the Notifications











