Shivaraj Kumar: ரஜினி என்னோட சித்தப்பா மாதிரி.. சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் ரசிகர்களின் பார்வைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினி ஜெயிலராக நடித்துள்ள நிலையில், கடத்தப்பட்ட தன்னுடைய மகனை மீட்க அவர் போராடுவதாக கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த டானாக சிவராஜ்குமார் நடித்துள்ளதாகவும் அவர் ரஜினிக்கு அவருடைய டாஸ்க்கில் உதவி செய்வதாகவும் படம் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி தன்னுடைய சித்தப்பா போன்றவர் என சிவராஜ்குமார் நெகிழ்ச்சி: நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் களமிறங்கியுள்ளது ஜெயிலர் படம். பான் இந்தியா படமாக இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான அட்ராக்ஷனை கூட்டுவதாக அமைந்துள்ளது. விஜய்யுடன் இணைந்திருந்த முந்தைய படம் பீஸ்ட் சொதப்பிய நிலையில், இந்தப் படத்தை சிறப்பாக அமைக்க வேண்டிய கட்டாயத்தில் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார்.
அதேபோல முன்னதாக ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த படம் ரஜினிக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இன்னும் சில தினங்களில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்கள் மற்றும் இசை வெளியீடு சிறப்பாக நடந்துள்ளது.
அனிருத் இசையில் படத்தின் காவாலா, ஹுகும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், ஜூஜிபி பாடலும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நிகழ்ச்சியில் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விடிவி கணேஷ், நெல்சன் திலீப்குமார், அனிருத் என படத்தின் நட்சத்திர பட்டாளமே இணைந்து நிகழ்ச்சியை களைகட்ட உதவியது.

படத்தில் பிரபல கன்னட நடிகரும் ராஜ்குமாரின் மகனுமான சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார். அவர் கர்நாடகாவை சேர்ந்த டானாக படத்தில் நடித்துள்ளதாகவும், கடத்தப்பட்ட தன்னுடைய மகனை மீட்கும் பணியில் ரஜினிக்கு அவர் உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், ரஜினி தன்னுடைய சித்தப்பா போன்றவர் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ரஜினி தன்னுடைய குடும்ப உறுப்பினர் இல்லை என்றபோதிலும் தன்னுடைய சித்தப்பா போன்றவர் என்று அவர் கூறியுள்ளார். தன்னுடைய தந்தை ராஜ்குமாருடன் சிறுவயதில் சபரிமலைக்கு சென்றபோது, ரஜினியின் கைகளை பிடித்துக் கொண்டு தான் பயணம் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த நாட்களின் நினைவுகள் மிகவும் சிறப்பானது என்றும் அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது இந்த பேச்சுக்கு கூட்டத்தினர் கைத்தட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











