Shivaraj kumar: ரஜினி ஸ்டைலில் ட்ரை பண்ணினேன்.. க்ளிக் ஆச்சு.. சிவராஜ்குமார் உற்சாகம்!
சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி ரிலீசாகி வசூலில் சூப்பர்ஹிட் சாதனையை செய்து வருகிறது.
இந்தப் படத்தின் வசூல் 400 கோடி ரூபாய்களை கடந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.
இந்தப் படத்தில் சிவராஜ்குமாரின் கேரக்டர் சில நிமிடங்களே வந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஜினி ஸ்டைலில் சிகரெட் ஸ்மோக்கிங்கை முயற்சித்த சிவராஜ்குமார்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாகி வசூல்மழை பொழிந்து வருகிறது. சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் ஜெயிலர் படத்தின் வசூல் 400 கோடி ரூபாய்களை கடந்துள்ளது.
இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், மற்ற மொழிகளில் முன்னணியில் உள்ள நடிகர்களை இந்தப் படத்தில் இணைத்திருந்தார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். தெலுங்கில் சுனில், மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் இந்தியில் ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தனர். மகனை மீட்கும் ரஜினியின் ஆபரேஷனில் இவர்கள் அவருக்கு உதவுவதாக கதைக்களம் அமைந்திருந்தது.
இந்நிலையில் கன்னடத்தில் மாஸ் ஹீரோவாக உள்ள சிவராஜ்குமாரும் இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் கலக்கியிருந்தார். அவரது காட்சிகள் சில நிமிடங்களே வந்தாலும் அவரது ஆக்ஷன் உள்ளிட்ட விஷயங்கள், ரஜினிக்கு பிறகு ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்தது மூலமாக கன்னட ரசிகர்களுடன் தமிழ் ரசிகர்களுக்கும் அவர் சூப்பர் விருந்தை கொடுத்திருந்தார்.
தமிழ் படமாக இருந்த போதிலும் கர்நாடகாவில் இந்தப் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், சிவராஜ்குமாரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய மகிழ்ச்சியை பகிரும் வகையில் அவர் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ரஜினியின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் அலாதியானது என்று இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதில் அவர்தான் கிங் என்றும் கூறியுள்ளார். மற்றவர்கள் சிகரெட்டை தூக்கி போட்டால், அவர்களை மீறி அவர்களது கை, வாய் வரை வரும் என்றும், ஆனால் ரஜினியின் கை, குறுப்பிட்ட தூரத்திலேயே இதை செய்யும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஸ்டைலை தானும் தன்னுடைய படத்தில் ட்ரை செய்ததாகவும் அது ஒருகட்டத்தில் கிளிக் ஆனதாகவும் சிவராஜ்குமார் கூறியுள்ளார். ஆனாலும் இந்த ஸ்டைலில் ரஜினிதான் எப்போதுமே பர்பெக்ட்டானவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











