Actor Shivaraj kumar: விஜய்க்கு தனி ஸ்டைல் இருக்கு.. சிவராஜ்குமார் பாராட்டு!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் ரிலீசாகி சிறப்பான வசூலை பெற்றன. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, பாங்காக், ஐதராபாத் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் ஃபேவரைட் நடிகராக இருந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் விருப்பமான நடிகராக இருந்து வரும் விஜய், அடுத்தடுத்த படங்களை ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார் தனது சமீபத்திய பேட்டியில் விஜய்யின் நடிப்பை பாராட்டியுள்ளார். விஜய்யின் நடிப்பு தனி ஸ்டைலில் இருக்கும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அடுத்ததாக தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில், அவர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

நடிகர் சிவராஜ்குமார்: நடிகர் தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 12ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியாகி அதிரடி சரவெடியாக அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக அவரது ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படம் ரிலீசாகவுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: முன்னதாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படம் ரஜினிக்கு அடுத்தபடியாக சிவராஜ்குமாருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலரான ரஜினியின் குடும்பத்தை காப்பாற்றும் கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். அவரது இந்த கேரக்டர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
விஜய் ஸ்டைல் வித்தியாசமானது: கேப்டன் மில்லர், ஜெயிலர் படங்கள் குறித்து அடுத்தடுத்த அனுபவங்களை பகிர்ந்துவரும் சிவராஜ்குமார், அடுத்தடுத்த தமிழ்பட ஹீரோக்கள் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. தன்னுடைய 100வது படத்தில் விஜய், சூர்யா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறித்தும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் விஜய்யின் படங்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்றும் அவரது ஸ்டைல் வித்தியாசமானது என்றும் சிவராஜ்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு பாராட்டு: விஜய் கடினமாக உழைத்தே தற்போதைய வெற்றியை அடைந்துள்ளதாகவும், ஒரே இரவில் அவர் இதை பெறவில்லை என்றும் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். விஜய் தன்னுடைய வெற்றிக்காக கடினமாக உழைத்ததாகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டதாகவும் பாராட்டியுள்ளார். தன்னுடைய நடை உடை பாவனைகளையும் விஜய் மெருகேற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று கடினமாக உழைப்பவர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள சிவராஜ்குமார், விஜய், மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு விஜய் உதவி செய்து, அவர்களுடன் கலந்துரையாடியது தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் நம்பிக்கை: விஜய் அரசியலுக்கு வருவதற்கான தகுதியை பெற்றுள்ளதாகவும் அவர் தன்னை நம்புவதாகவும் தெரிவித்துள்ள சிவராஜ்குமார், இந்த அவரது நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதெல்லாம் தேவையா என்று பலரும் கேட்கலாம், ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சிவராஜ்குமார் பேசியுள்ளார். அதற்கான தீர்வு அவருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக நடித்துவரும் சிவராஜ்குமார், தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











