Shivaraj kumar: சிவராஜ்குமாரை வைத்து தமிழ், கன்னடத்தில் படம்.. சத்யஜோதி பிலிம்சின் வேற லெவல் ப்ளான்!
பெங்களூர்: நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு அடுத்தப்படியாக படத்தின் வில்லன் விநாயகன் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷுடன் இணைந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் சிவராஜ்குமார்.

சிவராஜ்குமாரை வைத்து தமிழில் படமியக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம்: நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் சிறப்பான நடிகராக தொடர்ந்து மாஸ் காட்டி வருபவர். தற்போது தமிழிலும் இவரது கவனம் அதிகரித்துள்ளது. ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார் நடித்திருந்த ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிக்கு அடுத்தபடியாக படத்தின் வில்லன் நடிகர் விநாயகன் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர். படத்தில் சிவராஜ்குமாரின் ஸ்டைல் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷுடன் சிவராஜ்குமார் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் வெகுவாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், மூன்றாவது படமாக கேப்டன் மில்லர் படம் ரிலீசாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்ட காலக்கட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் போஸ்டர் மற்றும் டீசரில், அந்தக் காலத்திய துப்பாக்கியை வைத்துக் கொண்டு தனுஷ் மிரட்டியிருந்தார். அந்த காலகட்டத்திய கெட்டப்புடன் அவர் படத்தில் மாஸ் காட்டியிருந்தார். அதற்கேற்க நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் அவர் காணப்பட்டார். இதனிடையே டீசரில் சிவராஜ்குமாரின் கேரக்டர் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த படங்கள் நடிகர் சிவராஜ்குமாருக்கு தமிழ் ரசிகர்களையும் அதிகரித்துள்ளது. இதனால் கன்னடத்தில் அவரை வைத்து ஈட்டி பட இயக்குநரை ரவி அரசை வைத்து புதிய படத்தை திட்டமிட்டுள்ள சத்யஜோதி நிறுவனம் மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. இந்தப் படத்தின் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது. சிவராஜ்குமாருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் இருமொழி படமாக எடுக்கவும் திட்டமிட்டு வருகிறது.
கன்னடத்தின் புகழ்பெற்ற நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார். இவர் நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை காட்டி வருகிறார். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்த சிவராஜ்குமார் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தான் அஜித்துடன் நடிக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் தமிழின் சூப்பர்ஸ்டார்களையும் பட்டியலிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.


Click it and Unblock the Notifications











