Shivaraj kumar: ரஜினி.. தனுஷ்.. அடுத்தது தளபதி 69தான்.. விஜய்யுடன் இணையும் அதிரடி நாயகன்!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் சூட்டிங் கடந்த மாதம் 5ம் தேதி பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கப்பட்டது. அடுத்த நாளே இந்தப் படத்தின் சூட்டிங் பாடல்காட்சியுடன் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்திருந்த நிலையில், படத்தின் டைட்டில் சாங்காக இந்தப் பாடல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டது.

இந்தப்பாடல் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாகவே முடிக்கப்பட்டது. இந்தப் பாடல் சூட்டிங்கை தொடர்ந்து இந்த மாதம் முதல்வாரத்தில்தான் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கப்பட்டது. தற்போது சென்னையில் ஆபிசர்ஸ் அகாடமியில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாகவும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

vijay thalapathy 69 movie shivaraj kumar

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் கமிட்டாகியுள்ள தளபதி 69 படம், விஜய்யின் இறுதிப்படமாக மாஸ் காட்ட தயாராகிவருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கிவரும் சூழலில் அரசியல் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதம் பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில், படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது. கடந்த 6ம் தேதி படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூல் துவங்கப்பட்டு முதல்கட்டமாக பாடல்காட்சியின் சூட்டிங் சில தினங்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தளபதி 69 படம்: இதையடுத்து தன்னுடைய கட்சி மாநாட்டில் விஜய் பிசியான நிலையில், இந்த மாதம் முதல்வாரத்தில்தான் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னை ஆபிசர்ஸ் அகாடமியில் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ஷெட்யூலிலும் பாடல் காட்சியையே ஹெச் வினோத் படமாக்கி வருகிறார். தொடர்ந்து சென்னையின் பல இடங்களில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் அடுததமாதம் டிசம்பர் மாதம்வரையில் திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது கட்ட சூட்டிங்கில் நடிகை பூஜா ஹெக்டே கலந்துக் கொண்டுள்ளார். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

விஜய்யுடன் இணைந்த சிவராஜ்குமார்: இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் இணைந்துள்ளனர். வழக்கம்போல பான் இந்தியா படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது இணைந்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று முன்னதாக தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்த சிவராஜ்குமாரின் விருப்பம் தளபதி 69 படம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்தில் அவரது கேரக்டர் எப்படி அமையும் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவம் காட்டி வருகின்றனர்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்: முன்னதாக நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர்,தனுஷுடன் கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து அதிரடி தமிழ்ப்படங்களில் இணைந்து நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்த இரு படங்களிலுமே இவரது கேரக்டர் அதிரடி சரவெடியாக அமைந்தன. ஆயினும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களே வந்த போதிலும் ரஜினிக்கு அடுத்தபடியான வரவேற்பை பெற்றிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியே அவருக்கு தமிழில் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது. கன்னடத்திலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X