Kollywood superstars: தமிழ்ல நிறைய சூப்பர்ஸ்டார்கள் இருக்காங்க.. லிஸ்ட் போட்ட சிவராஜ்குமார்!

சென்னை: நடிகர் சிவராஜ்குமார் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார் நடித்திருந்த ஜெயிலர் படம் ரிலீசாகி அவரது தமிழ் ரசிகர்களின் வட்டத்தை அதிகரித்துள்ளது.

இதையடுத்து வரும் டிசம்பரில் சிவராஜ்குமார் நடித்துள்ள தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது.

Actor Shivaraj kumar list out Kollywood superstars in his recent interview

கோலிவுட் சூப்பர்ஸ்டார்களை பட்டியலிட்ட சிவராஜ்குமார்: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி போன்றவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது ஜெயிலர் படம். அதிகமான நட்சத்திரங்களை அதிலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து இந்தப் படத்தில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் நெல்சன். சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் மற்றும் மோகன்லால் என அனைவருக்கும் படத்தில் சமமான கேரக்டர்கள் அமைந்திருந்தன.

மேலும் படத்தின் வில்லன் விநாயகன் மற்றும் வசந்த் ரவிக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார் விநாயகன். அந்த அளவிற்கு அவரது கேரக்டர் மாஸாக அமைந்திருந்தது. கேமியோ கேரக்டர்களில் நடித்திருந்த 4 நடிகர்களும் சிறப்பான பர்பார்மென்சை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தனர். குறிப்பாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் தன்னுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Actor Shivaraj kumar list out Kollywood superstars in his recent interview

அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் மற்றும் டிஷ்யூ பேப்பரை ஸ்டைலாக ரம்யா கிருஷ்ணன் பக்கம் தள்ளும் காட்சிகள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகின்றன. கன்னட நடிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகின்றனர். அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழில் கேப்டன் மில்லர் படம் ரிலீசாகவுள்ளது. தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திலும் சிவராஜ்குமார் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் கடந்த மாதத்தில் வெளியான நிலையில், அதில் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் சிறப்புகள் குறித்தும் தமிழ் சினிமாவின் நடிகர்கள் குறித்தும் தொடர்ந்து சிவராஜ்குமாரின் பேட்டிகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. அவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் குறித்து பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழில் அதிகமான சூப்பர்ஸ்டார்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் கமல்ஹாசன், சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன், ஜெமினிகணேசன், தனுஷ், விஜய், அஜித் என அதிகமான சூப்பர்ஸ்டார்கள் இருப்பதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், சிவராஜ்குமார் இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X