Shivaraj kumar: புனீத் ஒருநாள் எனக்காக வருவான்.. காத்திருக்கும் சிவராஜ்குமார்!
சென்னை: நடிகர் சிவராஜ்குமார் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் சிறிய கேரக்டரில் சிறப்பான பர்பார்மென்சை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

அடுத்ததாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பரில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீசாகவுள்ளது.
நடிகர் சிவராஜ்குமார் வருத்தம்: நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் சிறப்பான ஹீரோவாக அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என கன்னடத்தில் பன்முகம் காட்டி வருகிறார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ்குமார், கடந்த 1986ல் வெளியான ஆனந்த் என்ற படத்தின்மூலம் தன்னுடைய கேரியரை கன்னடத்தில் துவங்கினார். தற்போது 100 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஹீரோவாக உள்ளார்.
தமிழில் இவரது நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் சிவராஜ்குமார். ஆனால் இந்தக் கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினியின் மகன் கடத்தப்பட அவரை மீட்கும் ரஜினியின் போராட்டத்தில் சிவராஜ்குமார் உதவுவதாக அவரது கேரக்டர் அமைந்திருந்தது. இந்தக் கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் அவர்.
ஜெயிலர் படத்தில் ரஜினியை அடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கேரக்டர்களில் சிவராஜ்குமார் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் இணைந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது. சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கதைக்களத்தில் இந்தப் படம் வரும் டிசம்பரில் ரிலீசாகவுள்ளது.
தொடர்ந்து கன்னடம், தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சிவராஜ்குமார், அடுத்ததாக மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார். பிரித்விராஜ் இயக்கி நடித்துவரும் டைசன் படத்தில் இவருக்கு மாஸான கேரக்டர் அமைந்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவராக மாறியுள்ளார் சிவராஜ்குமார். படத்தின் ரிலீசுக்கு முன்னதாக மட்டுமின்றி, படத்தின் ரிலீசை தொடர்ந்தும் மாஸ் காட்டி வருகிறார். அடுத்தடுத்த பேட்டிகளில் தன்னுடைய சினிமா கேரியர் குறித்தும் தமிழ் ஹீரோக்கள், ஜெயிலர் படம் குறித்தும் அடுத்தடுத்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மறைந்த பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் குறித்தும் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தம்பியின் மரணங்களை பார்த்து விட்டதாகவும் இழப்புகளில் இருந்து மீண்டு வருவது கஷ்டம் என்றும் கூறியுள்ள சிவராஜ்குமார் ஆனால் வாழ்க்கை சென்றுக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர்கள் மற்றும் புனீத் ஒருநாள் தனக்காக வருவார்கள் என்று நினைத்துக் கொள்வதாகவும் இந்த காத்திருப்பு அவர்களுடன் பயணிக்கும் நம்பிக்கையை தருவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











