Shivaraj kumar: அஜித்தோட நடிக்க ரொம்ப ஆசை.. சிவராஜ்குமாரின் விருப்பம் நிறைவேறுமா?

சென்னை: நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் சிறப்பான நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.

Actor Shivaraj kumar reveals his wish to join with Actor Ajith

அஜித்துடன் இணைந்து நடிக்க சிவராஜ்குமார் விருப்பம்: நடிகர் சிவராஜ்குமார் அதிகமான கன்னடப் படங்களில் நடித்துள்ளனர். சிவண்ணா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகிறது. தற்போது தமிழிலும் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார் சிவராஜ்குமார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்கள் கன்னடத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஜெயிலர் படமும் வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளது.

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான ஜெயிலர் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். படத்தில் சில நிமிடங்களே அவரது கேரக்டர் வந்த போதிலும் சிறப்பாக அமைந்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார் சிவராஜ்குமார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முன்னதாக தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசரிலும் இவரது காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க அதிகமான ஆசை உள்ளதாக சிவராஜ்குமார் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அவருடைய நடிப்பு பல விதங்களில் தன்னை கவர்ந்துள்ளதாகவும் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் சிறப்பான மனிதராக செயல்பட்டு வருவதாகவும் அவர் நினைத்தால் பைக் ஓட்டுவதாகவும் மிகவும் இயல்பாக அனைவருடனும் பழகுவதாகவும் சிவராஜ்குமார் மேலும் கூறியுள்ளார். இந்த இணைப்பே தன்னை மிகவும் அதிகமாக கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தான் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருந்த சான்ஸ் தவறியது குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரீமேக் கன்னடத்தில் திட்டமிடப்பட்டதாகவும் அதில் தான் லீட் கேரக்டரில் நடிக்கவிருந்ததாகவும் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவிருந்த இந்தப் படத்தின் சூட்டிங் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டதாகவும் சிவராஜ்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சிவராஜ்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X