Jailer :ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாருக்கு என்ன கேரக்டர் தெரியுமா.. வெயிட்தான்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு முக்கியமான நடிகரை நடிக்க வைத்துள்ளார் நெல்சன்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Actor Shivaraj kumars character revealed in Rajinikanths Jailer movie

ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் கேரக்டர் :

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், சில பேட்ச் வொர்க்குகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். படத்தில் ரஜினிக்கு டூயட் உள்ளிட்ட எதுவும் கிடையாது என்று படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியிலிருந்தும் முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

Actor Shivaraj kumars character revealed in Rajinikanths Jailer movie

ரஜினியின் அண்ணாத்த படம், வசூல் சாதனை புரிந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில், ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல, விஜய்யின் பீஸ்ட் படத்தை சொதப்பலாக கொடுத்த நெல்சனுக்கும் ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங், ராஜஸ்தான், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகர்களுக்கு சிறிய கேரக்டர்களாக இருந்தாலும் வலிமையான கேரக்டர்கள் அமைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நடிகர் சிவராஜ்குமாரின் கேரக்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கர்நாடகாவை சேர்ந்த ஒரு டானாக படத்தில் நடித்துள்ளதாகவும், அங்கு ஒரு குற்றவாளியை பிடிக்க செல்லும் ரஜினி, சிவராஜ்குமாரின் உதவியுடன் அந்தக் குற்றவாளியை பிடிப்பதாக கதைக்களம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த பல இடங்களில் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், கர்நாடகாவில் படத்தின் சூட்டிங் நடைபெற்றபோது, அங்கு சூட்டிங்கிற்காக சென்ற ரஜினிகாந்த், சிவராஜ்குமார் வீட்டிற்கே சென்று அவருடன் இணைந்து உணவு சாப்பிட்ட விஷயங்களும் நடந்தன. இருவரும் இணைந்து பல மணிநேரங்கள் உரையாடியதையும் பார்க்க முடிந்தது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இதன்மூலம் வெளிப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X