Shivaraj kumar: கமல் படத்திற்கு ஏமாற்றி டிக்கெட் வாங்கிய சிவராஜ்குமார்.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க

சென்னை: நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர். தற்போது கேப்டன் மில்லர், ஜெயிலர் என அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிவராஜ்குமார், ரஜினி தன்னுடைய சித்தப்பா போன்றவர் என்று கூறியிருந்தார்.

அந்த அளவிற்கு மறைந்த நடிகர் ராஜ்குமாருடன் சிறப்பான உறவை மேற்கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

Actor Shivaraj kumar says he is a die hard fan of Actor Kamal haasan

கமல் படத்தின் டிக்கெட்டிற்காக ஏமாற்றிய சிவராஜ்குமார்: நடிகர் சிவராஜ்குமார் கடந்த 1986ம் ஆண்டில் வெளியான ஆனந்த் படத்தின்மூலம் தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து இந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான இவர் தற்போது தமிழில் அடுத்தடுத்து இரு படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடிகர் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார்.

இதில் ஜெயிலர் படத்தில் தான் 10 நிமிடங்கள்தான் வருவேன் என்று தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதை மட்டுமே தான் கருத்தில் கொண்டதாகவும் தன்னுடைய கேரக்டர் குறித்தெல்லாம் தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் தன்னுடைய கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். படத்தின் சில போர்ஷன்கள் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதேபோல தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியான நிலையில், அதில் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது. சமீபத்தில் ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார் சிவராஜ்குமார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், நடிகர் ரஜினி மற்றும் தன்னுடைய தந்தை ராஜ்குமார் இடையிலான நட்பு குறித்து பெருமை தெரிவித்தார். தான் சிறுவயதில் நடிகர் ரஜினியின் கையை பிடித்துக் கொண்டு சபரிமலைக்கு சென்றதாகவும் ரஜினி தன்னுடைய சித்தப்பா போன்றவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தான் கோலிவுட்டில் அஜித், விஜய், கமல் போன்றவர்களின் படங்களை தொடர்ந்து ஒரு ரசிகனாக பார்த்து வருவதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பட்டுள்ளார். கமல் சாரின் படங்கள் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். ராஜ்கமல் நிறுவனத்திற்கு போன் செய்து, ராஜ்குமார் மேனேஜர் போல தன்னுடைய வாய்சை மாற்றி 10 டிக்கெட்டுகள் வேண்டும் என்று கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.

பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்ப்பதில்தான் தன்னுடைய ஆர்வம் அதிகமாக இருக்கும் என்றால், அதைவிட்டால் அந்தப் படத்தை பார்க்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி போன்ற திரையரங்குகளில் டிக்கெட் வேண்டும் என்று கேட்டு வாங்கிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தான் கமலின் தீவிர ரசிகன் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X