Actor Vijay: விஜய்யுடன் இணைந்த ஷிவண்ணா.. விஜய்யிடம் வைத்த கோரிக்கை.. நடந்தா நல்லாதான் இருக்கும்!

சென்னை: நடிகர் விஜய்யின் இறுதி படமாக உருவாகி வருகிறது தளபதி 69 படம். ஹெச் வினோத் இயக்கத்தில் இந்த படம் கடந்த மாதம் 5ம் தேதி பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சூழலில் படத்தின் முதல் கட்ட சூட்டிங் கடந்த மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் 2வது கட்டம் ஷூட்டிங் சென்னையில் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijay thalapathy 69 movie shivaraj kumar

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக இணைத்து வருகிறார். நாளைய தீர்ப்பு படம் மூலம் இவரது சினிமா பயணம் துவங்கிய நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து இளைய தளபதியாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் தளபதியாக கொண்டாடப்படுகிறார். இது தன்னுடைய வாழ்க்கையை முழுமைப்படுத்தாது என்று நினைத்தாரோ என்னவோ தற்போது அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அரசியல் கட்சியை விஜய் அறிவித்த நிலையில் கடந்த மாதத்தில் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

தளபதி 69 படம்: இதனிடையே தற்போது விஜய் நடித்தவரும் அவரது இறுதி படமான தளபதி 69 படத்தின் சூட்டிங் சென்னை ஆபிசர்ஸ் அகாடமியில் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த மாதத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு சில தினங்கள் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் 2வது கட்ட சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்த 2வது கட்ட சூட்டிங்கிலும் பாடல் காட்சியே படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் படத்தின் பூஜையிலும் கலந்துக் கொண்டனர்.

விஜய் -சிவண்ணா கூட்டணி: இந்நிலையில் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவராஜ்குமார் தன்னுடைய பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் நடிகர் விஜய் குறித்து மிகவும் சிலாகித்து பேசியுள்ளார். விஜய் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் நல்ல மனிதரும்கூட என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவருக்கு மிகவும் வலிமையான அரசியல் வாய்ஸ் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் தொடர்ந்து நடிப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சிவராஜ் குமார் தனது பேட்டியில் பேசியுள்ளார். அவருடைய படத்தில் இணைந்துள்ளது குறித்து உற்சாகத்தையும் பதிவு செய்துள்ளார்.

தமிழில் அதிரடி காட்டும் சிவராஜ்குமார்: ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் தமிழில் நடித்துள்ள சிவராஜ்குமார், அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார். விஜய்யின் இறுதி படத்தில் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் மிகவும் அழகாக அமைந்துள்ளதாகவும் சிவராஜ்குமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தன்னுடைய கால்ஷீட்டுக்கு தக்கபடி இந்த கேரக்டர் மேலும் சிறப்பாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X