Shivaraj kumar: KH233ல் இணையும் சிவராஜ்குமார்.. அதிக சர்ப்ரைஸ்களுடன் காத்திருக்கும் டீம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்து ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து இந்தியன் 2, கல்கி 2898 AD, ஹெச் வினோத்துடன் KH233, மணிரத்னத்துடன் KH234 போன்ற படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் கமல்ஹாசன்.
இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், இந்தியன் 3 படமும் உருவாகவுள்ளதாகவும் அடுத்த ஆண்டிலேயே இந்தப் படம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது விக்ரம். இந்தப் படத்தை தயாரித்து லீட் கேரக்டரில் நடித்திருந்தார் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.
இந்தியன் 2 படம்: முடங்கிக்கிடந்த இந்தியன் 2 படத்தை தூசித்தட்டி தற்போது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் சிஜி வேலைகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசிற்கு வில்லனாக கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்தப் படத்திற்கு சில தினங்களே கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல். இருந்தபோதிலும் அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஆங்கரிங் செய்து வருகிறார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
KH233 படம்: இந்த கமிட்மென்ட்களை நிறைவு செய்து விட்டு இந்த மாதத்திலேயே ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டிய சிவராஜ்குமார் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவராஜ்குமார்: விக்ரம் படத்தை போலவே இந்தப் படத்திலும் ஏராளமான நடிகர்கள் இணையவுள்ளதாகவும் கூறபட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவ கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக கமலின் துப்பாக்கி சூட்டிங் பயிற்சி வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











