அழிவை கொடுப்பவர்களை உலகம் மறக்காது.. மிரட்டலாக வெளியானது சிவராஜ்குமாரின் கோஸ்ட் டிரைலர்!
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் கோஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படத்தை இயக்குநர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கி உள்ளார். இப்படம் தசரா பாண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தில் அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயண், அர்ச்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ் மற்றும் தத்தன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் கேங்ஸ்டராக பட்டையை கிளப்பி இருந்தார் சிவராஜ்குமார். இந்த படத்தில் அவர் வந்தது என்னமோ இரண்டே இரண்டு காட்சிதான் என்றாலும், அந்த இரண்டு சீனிலேயே ஒட்டுமொத்த ஆடியன்சின் கைத்தட்டலை அள்ளினார். தமிழ் ரசிகர்களிடம் தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார்.
அடுத்தடுத்த படங்களில்: உபேந்திரா, அர்ஜுன் ஜன்யாவின் 45, ராம் துலிப்புடி, பைரதி ரணங்கள், IV ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்து இருக்கும் இவர், கோட்ரேஷ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படத்திலும் கமிட்டாகி உள்ளார். மேலும், தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோஸ்ட்: ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் இவர், எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சந்தேஷ் நாகராஜ் தயாரித்துள்ள கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டிரைலர்:
இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை சற்று முன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், யுத்தம் மனிதகுலத்தின் ஆறாத பல காயத்தை தரும், இந்த மாதிரி யுத்தங்களால் பல சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டுச்சோ இல்லையோ... நிச்சயமா அழிந்து போய் இருக்கு. பல சாம்ராஜ்யங்களை உருவாக்கிய சக்கரவர்த்திகளை வரலாறு மறந்துவிட்டது.

ஆனால் அழிவைக் கொண்டுவரும் என்னைப் போன்றவர்களை அது ஒருபோதும் மறக்காது என்று டிரைலர் சும்மா மிரட்டலாக இருக்கிறது. இரண்டு நிமிடம் ஒடக்கூடிய இந்த வீடியோவின் மூலம் சூப்பர் ஸ்டாரின் அனைத்து துப்பாக்கிகளையும் எரிக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என்பது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











