கன்னட நடிகர் உபேந்திரா நடித்துள்ள கப்ஸா திரைப்படம் மார்ச் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது.
மும்பை : கப்ஸா திரைப்படம் எனது திறமையை நிரூபிக்கும் படமாக இருக்கும் என்று நடிகை ஸ்ரேயா சரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கன்னட நடிகர் உபேந்திரா நடித்துள்ள கப்ஜா திரைப்படம் மார்ச் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது.
இத்திரைப்படம் கன்னடம்,தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஒரிசா, மலையாளம் என 7 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

கப்ஸா
ஆக்ஷன் திரைப்படமான கப்ஸா திரைப்படத்தில், உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ சித்தேஷ்வரா எண்டர்பிரைசஸ் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரரின் கதை
1942 முதல் 1984 வரையிலான காலக்கட்டத்தில் மாஃபியா உலகில் சிக்கிக் கொள்ளும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகனைச் சுற்றியே கதை நகர்கிறது. இதில் உபேந்திரா கேங்ஸ்டராக, ஒரு டானாக நடித்துள்ளார். அவரை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயா சரண்
இப்படம் வரும் 17ந் தேதி வெளியாக உள்ளதால், ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த படத்தில் இத்தனை ஹீரோக்கள் நடிக்கும் போது என்னுடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும் யோசித்தேன். இயக்குனர் சந்துரு என்னிடம் கதை சொல்லும் போது, அவரது கண்களில் இருந்த ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்த பிறகு எனக்கும் ஆர்வம் அதிகரித்து விட்டது.

கதக் நடனம்
இந்தப் படத்தில் நான் கதக் நடனம் ஆடி உள்ளேன், மேலும், நமாமி நமாமி என்ற புதிய பாடலுக்கு, நான் கச்சிதமாக ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது இப்படம் கன்னட மொழியில் உருவாகி இருந்தாலும், பல தென்னிந்திய மொழிகள் தவிர அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.

எனது திறமையை வெளிப்படுத்தும் கதை
மேலும், எனது திறமையை வெளிப்படுத்த இந்த படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்றும், பெங்களூருவுக்குத் திரும்பி, மீண்டும் ஒரு கன்னடப் படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரத்தையும் இங்குள்ள மக்களையும் நான் விரும்புகிறேன் என்று ஸ்ரேயா கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











