twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது நான் இல்ல.. ஃபேக்.. நம்பி ஏமாறாதீங்க.. பரவும் விளம்பரத்தால் பதறிய நடிகர் சிபிராஜ்!

    |

    சென்னை: தனது பெயரில் பரவும் விளம்பரத்தை நம்ப வேண்டாம் என நடிகர் சிபிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நடிகர் சிபி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

    அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த நர்ஸ்...பின்னணியில் நடந்த விவகாரம் இதுதான் அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த நர்ஸ்...பின்னணியில் நடந்த விவகாரம் இதுதான்

    கடைசியாக இவரது நடிப்பில் கபடதாரி படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் நடித்த மாயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிபி பெயரில் விளம்பரம்

    சிபி பெயரில் விளம்பரம்

    தற்போது ரங்கா, ரேஞ்சர், வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிபிராஜின் பெயரில் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    18 வயது முதல்..

    18 வயது முதல்..

    அதாவது, சிபி சத்யராஜ் படத்திற்கு அவசரமாக பெண்கள் தேவை என ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது. அதில் ஹீரோயின் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஃபிரண்ட்ஸ் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும், துணை நடிகைகள் 22 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் மட்டும்தான்

    வாட்ஸ்அப் மட்டும்தான்

    மேலும் நல்ல ரெஸொல்யூஷனில் ரீசன்ட்டாக எடுக்கப்பட்ட போட்டோக்கள் வேண்டும் என்றும் வாட்ஸ்அப் மட்டும்தான் என்று ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அன்பு புராஜெக்ட் மேனேஜர் என்றும் அந்த போஸ்ட்டில் உள்ளது.

    சிபியின் படம்

    சிபியின் படம்

    இதில் சிபிராஜின் படமும் இளம்பெண் ஒருவரின் படமும் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த நடிகர் சிபிராஜ், தனது சமூக வலைதளத்தில் இந்த விளம்பரத்தை ஷேர் செய்துள்ளார். மேலும் இது தான் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்

    தெளிவுபடுத்த விரும்புகிறேன்

    தெளிவுபடுத்த விரும்புகிறேன்

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், டியர் பிரண்ட்ஸ் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இது போலியான காஸ்டிங் அழைப்பு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    இரையாகாதீர்கள்

    இரையாகாதீர்கள்

    இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் நம்பாதீங்க. இதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தயவு செய்து யாரும் இதற்கு இரையாகாதீர்கள்.. இவ்வாறு நடிகர் சிபி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Read more about: sibi சிபி
    English summary
    Actor Sibi clarifies about fake casting call. A advertisement roaming around on social media about casting call.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X