350 திரையரங்குகளில் ரிலீசாகும் மாயோன்.. எங்க தெரியுமா.. பாக்கலாம் வாங்க!
சென்னை : சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது மாயோன்.
அருண்மொழி மாணிக்கம் இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதியதுடன் தயாரிக்கவும் செய்துள்ளார்.
தற்போது இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ்
நடிகர் சிபி சத்யராஜ், சமீப காலங்களில் சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்து வருகின்றன. ஆரம்பத்தில் மிகவும் சுமாரான படங்களில் நடித்துவந்த இவரது நடிப்பில் தேர்ச்சி காணப்படுகிறது.

மாயோன் படம்
இந்நிலையில் தற்போது புதுமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள மாயோன் படத்தில் நடித்துள்ளார் சிபி சத்யராஜ். இந்தப் படத்திற்கு அருண்மொழி மாணிக்கம் திரைக்கதையை எழுதியுள்ளார். இளையராஜாவின் மிரட்டலான இசையில் இரு தினங்களுக்கு முன்பு படம் வெளியாகியுள்ளது.

இளையராஜா மிரட்டல் இசை
இந்தப் படத்தின் இசையை சிறப்பான வகையில் அமைத்துள்ளார் இளையராஜா. படத்தின் முதல் பாடலையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆன்மீகத்தை மையமாக கொண்டு உருவாகியிருந்த அந்த பாடல் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளது.

அறிவியல் + ஆன்மீகம்
அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தது மற்றும் இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்யேகமான ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பாராட்டு
இதையடுத்து படத்தின் ரிலீசின்போது படத்தை பார்வையற்றவர்களுக்கு படக்குழு காட்சிப் படுத்தியிருந்தது. சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த முயற்சி தற்போது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது. படத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு தற்போது படக்குழுவினரை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தெலுங்கிலும் ரிலீஸ்
இதனிடையே இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கும் கொண்டு செல்ல படக்குழு தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. வரும் ஜூலை 7ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தெலுங்கு விநியோகஸ்தர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளதாகவும் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Recommended Video

அமானுஷ்ய காட்சிகள்
பழைய கோயிலில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியை மையமாக கொண்டுள்ள மாயோன் படத்தில் சிபி உள்ளிட்டவர்கள் சந்திக்கும் சில அமானுஷ்யங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. விறுவிறுப்பான திரைக்கதையை இந்தப் படத்தில் ரசிகர்கள் அனுபவித்து வருகின்றனர். கதை அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விக்ரம் படத்தின் வசூல்வேட்டை
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாயோன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்கள் விக்ரம் படத்தின் வசூல் வேட்டையை குறைக்குமா என்பதை இன்னும் சில தினங்கள் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











