சிபி -சத்யராஜ் கூட்டணியின் ஜாக்சன் துரை அத்தியாயம் இரண்டு.. விரைவில் சூட்டிங்!
சென்னை : காமெடி களத்தில் பேய்ப்படம் என்ற பார்முலாவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்களில் ஜாக்சன் துரை படமும் இடம்பெற்றது.
இந்தப் படத்தை தரணிதரன் இயக்கியிருந்த நிலையில், படத்தில் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர்.
சிபிராஜிற்கு பிந்து மாதவி ஜோடியாகியிருந்த நிலையில், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ஜாக்சன் துரை படம்
நடிகர் சிபிராஜ் மற்றும் அவருடைய அப்பா சத்யராஜ் இணைந்து நடித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஜாக்சன் துரை. காமெடி களத்தில் பேய்ப்படம் என்ற பார்முலாவில் அதிகமான படங்கள் ரிலீசாகியுள்ள நிலையில், அந்த வரிசையில் ஜாக்சன் துரையும் கவனத்தை ஈர்த்தது.

சுதந்திர போராட்ட கால பிளாஷ்பேக்
தரணிதரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாகியிருந்தார் பிந்து மாதவி. கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட காலத்தை முன்வைத்து இந்தப் படத்தின் பிளாஷ்பேக் அமைந்திருந்தது.

காமெடி கதைக்களம்
அயன்புரம் என்ற கிராமம், அங்கு கிராம மக்கள் அஞ்சும் ஜாக்சன் துரை பேய், உண்மையை அறிய கிராமத்திற்கு வரும் எஸ்ஐ சிபிராஜ் என அடிப்படை கதைக்களத்தைக் கொண்டு, அதில் காமெடியை புகுத்தி திரைக்கதையை கொடுத்திருந்தார் தரணிதரன். இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்திருந்தார்.

காமெடியே பிரதானம்
முதல் பாதியில் சிபி, கருணாகரன் என காமெடியாக நகரும் கதைக்களத்தில் சத்யராஜ் வந்தவுடன் சீரியஸ் தொற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்த்தால் அவரும் அவரது பங்கிற்கு காமெடியையே செய்தது படத்திற்கான சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கும் படக்குழுவினர் தயாராகியுள்ளனர்.

ஜாக்சன் துரை சாப்டர் 2
ஜாக்சன் துரை படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. சிபிராஜ் -சத்யராஜ் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள இந்தப் படத்தில் சிபிக்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா. சித்தார்த் விபினே இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

நாயகியாக இணையும் சம்யுக்தா
முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கவுள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், இந்த முறை இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்கம், இசை என அனைவரும் முதல் பாகத்தில் பணிபுரிந்தவர்களே கமிட்டாகியுள்ள நிலையில், நாயகியாக சம்யுக்தா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











