ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு...சுருண்டு விழுந்து உயிரிழந்த நடிகர்!
மும்பை : ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சீரியல் நடிகர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
மாடலான சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி 'குசும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பல நிகழ்ச்சிகளில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
கசௌதி ஜிந்தகி கே, கிருஷ்ணா அர்ஜுன், க்யா தில் மே ஹை போன்ற தொடர்களில் அவர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி
சின்னத்திரை நடிகரான சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி, வாரிஸ் மற்றும் சூர்யபுத்ர கர்ண் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பதால், தினமும் ஜிம்முக்கு செல்வதை வழக்கமான வைத்து இருக்கிறார்.

மயங்கி விழுந்து உயிரிழந்தார்
இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன அவரது நண்பர்கள் அருகில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி சித்தாந்த் உயிரிழந்தார்.

ரசிகர்கள் இரங்கல்
46 வயதே ஆன சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஜெய் பானுஷாலி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சித்தாந்த் வீரின் புகைப்படத்தை வெளியிட்டு, "விரைவாக சென்றுவிட்டாய்"என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். பல பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோகத்தில் திரைத்துறை
நடிகர் சித்தாந்த் ஈராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2015ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தனர்.பின்னர் இவர் 2017ம்ஆண்டு மாடல் அழகியான அலெசியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

புனித் ராஜ்குமார்
பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதே போல கன்னட உலகின் பிரபலமான நடிகரான புனித் ராஜ்குமார், உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications











