twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்!

    நடிகர் சித்தாந்த் கபூர் சூப் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.

    |

    மும்பை: நடிகர் சித்தாந்த் கபூர் டின்னருக்கு வெஜிடபிள் சூப் மட்டுமே சாப்பிட்டாராம்.

    நடிகர்களின் ஃபிட்னஸ் சீக்ரெட் ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை. ஆனால் சிலருடைய உணவுப்பழக்கம் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

    Actor Siddhanth Kapoor about Paltan shoot!

    பாலிவுட் நடிகரும், நடிகை ஷ்ரதா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் இரவு உணவாக வெஜிடபிள் சூப் மட்டுமே குடித்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    சித்தாந்த் இப்போது, ஜே.பி.தத்தாவின் இயக்கத்தில் பல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் 1967 ஆம் ஆண்டு சிக்கிம் எல்லைப்பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை கடல்மட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக்கில் படமாக்கியுள்ளனர். ஆக்ஸிஜன் மிகக்குறைவாக உள்ள அப்பகுதியில் தங்கியிருக்கும்போது, சித்தாந்த் கபூர் இரவு உணவாக வெஜிடபிள் சூப் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.

    ஆக்ஸிஜன் குறைவான பகுதிகளில் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது கடினம். மேலும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள இதைச் செய்தேன் என்கிறார் சித்தாந்த். அந்த தட்பவெப்ப நிலையில் வாழ்வதற்கு அது உதவியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஜாக்கி ஷெராஃப், அர்ஜுன் ராம்பால், சோனு சூத், ஹர்ஷவர்தன் ரானே, ஈஷா குப்தா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனு மாலிக் மற்றும் சஞ்சய் சௌத்ரி இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகிறது.

    English summary
    Actor Siddhanth Kapoor just completed his Paltan shoot. He used to have a bowl of vegetable soup for dinner when he stayed in Ladakh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X