twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டிப்பிடிக்காதீங்க.. கைகொடுக்காதீங்க.. கூட்டமா போகாதீங்க.. கொரோனா பீதி.. பிரபல நடிகர் அட்வைஸ்!

    |

    சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் கட்டிப்பிடிக்காதீர்கள் கைகொடுக்காதீர்கள் என பிரபல நடிகரான சித்தார்த் மக்களுக்கு அட்வைஸ் வழங்கியிருக்கிறார்.

    கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ், இதுவரை உலகம் முழுக்க 7000க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது.

    150க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திரையரங்குகள் மூடல்

    திரையரங்குகள் மூடல்

    கொரோனா வைரஸ்க்கு இதுவரை இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. சினிமா, சீரியல், விளம்பர படங்கள் மற்றும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் என எந்த விதமான படப்பிடிப்பு வேலையிலும் ஈடுபடக்கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சி அறிவுறுத்தியுள்ளது.

    எச்சரிக்கையுடன் இருங்கள்

    எச்சரிக்கையுடன் இருங்கள்

    இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சித்தார்த் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் சில அறிவுறுத்தல்களை கூறியிருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் சித்தார்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    கட்டிப்பிடிக்காதீங்க

    கட்டிப்பிடிக்காதீங்க

    தொடர்ந்து பேசிய அவர், கையை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவுங்கள். யாருடனும் நெருங்கி பழகாதீர்கள். கொஞ்ச நாளைக்கு கை கொடுப்பது, கட்டிப் பிடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லாதீர்கள். இதைல்லாம் செய்தாலும் ரொம்ப பயப்படுகிற நிலை என்று எதுவும் கிடையாது.

    பழைய நிலைக்கு..

    பழைய நிலைக்கு..

    தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா வைரஸ் அந்த அளவுக்கு வரவில்லை. தமிழக அரசும் அவர்கள் நிலையிலிருந்து என்ன பண்ண வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கூடிய விரைவில் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்புவோம் என்று கூறினார்.

    English summary
    Actor Siddharth advising people to prevent from coronavirus. He says Don't get too close to anyone, dont shake hands to anyone and dont hug anybody for sometime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X