சர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற சித்தார்த் - அதிதி ராவ்!
ஐதராபாத் : காதல்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், கணம் போன்ற தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சர்வானந்த்.
சர்வானந்திற்கும் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ரக்ஷிதா ரெட்டிக்கும் இன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரபல தெலுங்குப்பட ஹீரோ ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் சர்வானந்த்
நடிகர் சர்வானந்த் தெலுங்கில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான அய்தோ தாரிகு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கௌரி, சங்கர் தாதா எம்பிபிஎஸ், யுவசேனா என அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழிலும் ரசிகர்கள்
தமிழில் காதல்னா சும்மா இல்லை என்ற படத்தில் அறிமுகமானாலும் சரவணன் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலமே தமிழக ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். இந்தப் படத்தில் அனன்யாவிடம் மாட்டிக் கொண்டு இவர் அல்லோல கல்லோல படுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கணம் படத்தில் சர்வானந்த்
தொடர்ந்து சமீபத்தில் வெளியான கணம் படத்திலும் நடித்திருந்தார் சர்வானந்த். இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை அமலா நடித்திருந்தார். டைம் மிஷினை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. இந்நிலையில் இன்றைய தினம் சர்வானந்திற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சர்வானந்த் நிச்சயதார்த்தம்
அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞரான ரக்ஷிதா ரெட்டியுடன் சர்வானந்திற்கு இன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ரக்ஷிதா அரசியல் பின்புலம் கொண்டவர். இதனிடைய தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சர்வானந்த் வெளியிட்டுள்ளார்.

சித்தார்த் -அதீதி பங்கேற்பு
இந்த நிச்சயதார்த்தத்தில் பிரபல தெலுங்குப்பட ஹீரோ ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார். இந்நிலையில் இந்த நிச்சயதார்த்தத்தில் சித்தார்த் மற்றும் அதீதி ராவ் ஹைதாரி ஆகியோர் ஜோடியாக பங்கேற்றது ஹைலைட்டாக அமைந்துள்ளது.

ஜோடியாக பங்கேற்பு
சித்தார்த் மற்றும் அதீதி இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்தாலும் தங்களது காதலை இன்னும் உறுதி செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் சர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக கலந்துக் கொண்டு புகைப்படங்களுக்கு ஜோடியாக போஸ் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











