‘மனசோ இப்போ தந்தி அடிக்கிது“.. சித்தார்த்துடன் ஆட்டம் போட்ட அதிதி ராவ்..விரைவில் திருமணமா?

சென்னை : நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் "மனசோ இப்போ தந்தி அடிக்கிது" பாடலுக்கு ஜோடியாக ஆட்டம் போட்டு இணையத்தை திணறடித்துள்ளனர்

பாய்ஸ் படத்தின் மூலம் நடிகரான சித்தார்த் 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் நடித்து பிரபலமானார்.

காவியத் தலைவன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சித்தார்த்திற்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது.

மனசோ இப்போ தந்தி அடிக்கிது

மனசோ இப்போ தந்தி அடிக்கிது

நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் நிலையில்,நடிகை அதிதி ராவும் சித்தார்த்தும் விஷால் நடித்த எமினி படத்தில் வரும் "மனசோ இப்போ தந்தி அடிக்கிது" பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடி உள்ளனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை மலை போல் குவித்து வருகின்றனர்.

ஒன்றாக நடித்த காதல்

ஒன்றாக நடித்த காதல்

அதிதி ராவும், சித்தார்த்தும் அஜய் பூபதி இயக்கத்தில் உருவான மகா சமுத்திரம் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. மகா சமுத்திரம் படத்தின் ப்ரோமோஷனுக்கும் இருவரும் ஒரே காரிலேயே சென்றனர். அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் தங்கள் உறவைப் பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

ஜோடியாக பல இடங்களில்

ஜோடியாக பல இடங்களில்

அதிதியும் சித்தார்த்தும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி பார்ட்டி மற்றும் விழா நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பாடல் வெளியிட்டு விழாவிற்கு இருவரும் கூட்டாக வந்த மீடியாக்களின் கண்ணில் சிக்கினர். அதேபோல, தெலுங்கு நடிகர் சர்வானந்த்தின் நிச்சயத்திற்கும் ஜோடியாக சென்று வாழ்த்தினர்.

ஏராளமான படங்களில்

ஏராளமான படங்களில்

நடிகை அதிதி ராவ், கார்த்தி நடிப்பில் வந்த காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் செக்க சிவந்த வானம், சைக்கோ படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ஹெய் சினாமிகா படம் வெளியானது. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X