ஐபோன் 16 லாஞ்சில் நட்சத்திர ஜோடி.. ஆப்பிள் ஓனருடனே கைகுலுக்கி பேசிய அதிதி ராவ்!
சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமணம் நடந்ததாக கூறிய நிலையில், இருவரும் நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினர்.
சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார் சித்தார்த். தொடர்ந்து அதிதி ராவுடன் இணைந்து உலகின் பல இடங்களுக்கும் சென்று சில் செய்து வருகிறார்.

சித்தார்த் -அதிதி ராவ்: நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் நீண்ட காலங்களாக காதலித்துவரும் நிலையில், விரைவில் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்துள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக பலரும் பேசினர். ஆனால் தங்களது நிச்சயதார்த்தம் தான் நடந்ததாக இருவரும் உறுதிப்படுத்தினர். விரைவில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உலகின் பல இடங்களுக்கும் இவர்கள் சென்று சில் செய்து வருகின்றனர்.

உலகம் சுற்றும் ஜோடி: சமீபத்தில் இத்தாலிக்கு இவர்கள் இருவரும் சென்ற நிலையில், அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பொருத்தமான ஜோடி என்று பாராட்டு தெரிவித்தனர். ஏராளமான லைக்ஸ்களையும் குவித்தனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இவர்கள் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அடுத்தடுத்து தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து அமெரிக்காவை சுற்றி வருகின்றனர். இதனிடையே ஆப்பிள் ஐபோன் 16 லாஞ்சில் கலந்துக் கொண்டனர்.

ஆப்பிள் சிஇஓவுடன் கைக்குலுக்கல்: மேலும் ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் சந்தித்து கைக்குலுக்கியுள்ளனர். இந்த சந்திப்பின் புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தங்களது உற்சாகத்தையும் பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் இருவரும் கலந்துக் கொண்ட நிலையில், இந்த பிராண்டின் மிகப்பெரிய ரசிகர்கள் தாங்கள் என்றும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிதி ராவ் உற்சாகம்: இதனிடையே கடந்த இரு தினங்களாக தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளை எக்ஸ்பீரியன்ஸ் செய்து வருவதாக அதிதி ராவ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மிகவும் ஸ்வீட்டான நபர் டிம் குக் என்றும் அதிதி பாராட்டு தெரிவித்துள்ளார். தங்களது இதயம் நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அதிதி ராவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் நிலையில் இவர்களது திருமணம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











