Aditi Rao :சித்தார்த்துடன் காதலை உறுதி செய்த அதிதி ராவ்.. எப்படி தெரியுமா!
சென்னை : நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் டேட்டிங்கில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இருவரும் இந்த விஷயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.
ஆனால் பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்க முடிகிறது. இருவரும் இணைந்து புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் புதிய படத்தின் பிரீமியரில் சித்தார்த் மற்றும் அதிதி பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர்.
சித்தார்த் -அதிதி ராவ் ஜோடி : ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வந்த சித்தார்த்திற்கு தற்போது பட வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது. இவர் தொடர்ந்து ஸ்ருதிஹாசன், சமந்தா என நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
இவர்கள் இருவரும் மகா சமுத்திரம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவரும் தற்போது டேட்டிங்கில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை உண்மையாக்கும் வகையில் இருவரும் பொது வெளிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இணைந்து பங்கேற்று வருகின்றனர். மேலும் வெளியிடங்களில் இருவரையும் நெருக்கமாக பார்க்க முடிகிறது. இருவரையும் பல திரைப்பட விழாக்களிலும் ஜோடியாக பார்க்க முடிகிறது.

காற்று வெளியிடை மூலம் தமிழில் அறிமுகமான அதிதி ராவ், தமிழ், தெலுங்கு, இந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே சித்தார்த்துடனான காதல் குறித்த தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார் அதிதி. இந்நிலையில் சமீத்தில் சித்தார்த்துடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிதி, வழக்கம்போல உற்சாகமாக மீடியாவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்த நிலையில், லவ்லி ஜோடி என்று போட்டோகிராபர் ஒருவர் இந்த ஜோடியை பார்த்து கமெண்ட் செய்துள்ளார்.
அதிதி புன்னகையுடன் இந்த கமெண்ட்டை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சித்தார்த்துடனான காதலை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில்தான் இந்த ஜோடி பங்கேற்றது. கருப்பு நிற சுடிதாரில் அதிதி பங்கேற்ற நிலையில், சித்தார்த்தும் மிகவும் ஸ்மார்ட்டாக காணப்பட்டார். லவ்லி ஜோடி என்ற கமெண்ட்டிற்கு பொருத்தமாகவே இந்த ஜோடி காணப்பட்டது.

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் டேட்டிங்கில் உள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், அதிதியை திருமணம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிதியும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்தான். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைவது குறித்து தெலுங்குத் திரையுலகிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











