Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
“என்னை மன்னிக்கவும்“…சாய்னா நேவாலிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த் !
சென்னை : பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மனம் திறந்து மன்னிப்பு கோரினார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட போது பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார்.
இதுகுறித்து டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசம் செய்து கொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என பதிவிட்டிருந்தார்.
சாய்னா
நேவாலுக்கு
ஆபாச
கமெண்ட்
போட்ட
நடிகர்
சித்தார்த்..
நோட்டீஸ்
அனுப்பிய
மகளிர்
ஆணையம்

சித்தார்த்துக்கு கண்டனம்
இதற்கு பதிலளித்து ரீடிவீட் செய்த நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து ஆபாச பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். இதையடுத்து சித்தார்த்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மன்னிக்கவும்
இந்நிலையில் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த rude jokeக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

ஏமாற்றம்
நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. அது ஒரு நல்ல ஜோக் இல்லை. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும்.

உள்நோக்கம் இல்லை
மேலும், எனது ட்வீட் நகைச்சுவையானது மற்றவர்கள் கூறுவது போல அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் எப்போதும் பெண்களை மதிப்பவன், ஒரு பெண்ணான உங்களைத் தாக்கும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. இத்துடன் இந்த விவகாரத்தை விட்டுவிடலாம். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார். சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதை அடுத்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.