மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார்: கேரள முதல்வரை பாராட்டும் சித்தார்த்
கேரள முதல்வரை நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார்
சென்னை: கேரள முதல்வர் பினரயி விஜயனை நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார்.
வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த மழையால் கேரளாவில் 13 மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. ரூ. 19, 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்திருப்பதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரள வெள்ளபாதிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த், சுயநலமில்லாமல் கருணையாக பணியாற்றுவது மன நிறைவைத் தருகிறது. மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக கேரள முதல்வர் பினரயி விஜயன் திகழ்கிறார். எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிகள் அரசாங்கம் என அனைவருமே தங்களின் ஒற்றுமையை பறைசாற்றியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.
அதேபோல், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ள சித்தார்த், மீதமுள்ள இந்தியா இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 10 லட்சம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











