Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
சென்னை: நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் ரிலீசான சித்தா படம் கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் நடித்து தயாரிக்கவும் செய்திருந்தார் சித்தார்த். படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சித்தார்த். நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் நீண்ட காலங்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களிலும் இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே, இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து ஒன்றாக பங்கேற்று தங்களது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இருவரும் தங்களது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்ததாக தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருமே உறுதிப்படுத்தவில்லை. இதனால் இவர்களது திருமணம் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தன்னுடைய நிச்சயதார்த்தத்தை சித்தார்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த்: நடிகர் சித்தார்த் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப்படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சித்தா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சித்தார்த் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. அண்ணன் மகளுடனான அவரது பிணைப்பு படத்தில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
சித்தார்த் -அதிதி ராவ் ஜோடி: இதனிடையே நீண்ட காலங்களாக அதிதி ராவை சித்தார்த் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதை நிரூபிக்கும் வகையில் இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே பங்கேற்றதை பார்க்க முடிந்தது. இந்த காதல் குறித்து இருவரும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும் இந்த காதலை நிரூபிக்கும் வகையில் அவர்களது அடுத்தடுத்த நடவடிக்கைகள் காணப்பட்டன. கடந்த 2021ம் ஆண்டில் மகா சமுத்திரம் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. சமூக வலைதளங்களிலும் இருவரும் இணைந்திருக்கும்படியான புகைப்படங்களை பார்க்க முடிந்தது.
ரகசிய நிச்சயதார்த்தம்: இதனிடையே சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் தெலங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் என்ற ஸ்ரீரங்கநாயகி கோயிலில் தங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதையொட்டிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக பகிரப்பட்டது. இந்த விஷயத்தை இருவரும் அதிகாரப்பூர்வமாக பகிரவில்லை. இதனிடையே இந்த திருமணம் குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் சித்தார்த் இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தத்தை உறுதிப்படுத்திய சித்தார்த்: அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவள் ஓகே சொன்னாள் என்றும் Engaged என்றும் தெரிவித்துள்ளார். இதையொட்டி சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நீண்ட காலங்களாக இவர்களின் காதல் விவகாரம் தொடர்ந்து வெளிப்படையாக இல்லாமல் இருந்துவந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











