Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாக்ஸர் அங்கிள்.. என்னை பெரிய ஆளாக்க வேணாம்.. உங்க வேலைய பாருங்க போதும்.. அமைச்சரிடம் எகிறிய நடிகர்!
சென்னை: என்னை பெரிய ஆளாக்க வேண்டாம், உங்களின் வேலையை பார்த்தாலே போதும் என நடிகர் சித்தார்த் அமைச்சரை சாடியிருக்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததற்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இந்த விவகாரத்தில் அவர் கடுமையாக சாடி டிவிட்டியிருந்தார்.
ஜெயலலிதா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒருபோதும் ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக நெறி தவறி சீரழிந்திருக்கிறது என்றும் டிவிட்டியிருந்தார் சித்தார்.

எந்தப் படத்தில் நடித்திருக்கிறார்?
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் சித்தார்த்தின் கண்டனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர் யார்? எந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

விளாசிய நடிகர்
மேலும் சிலர் விளம்பரத்துக்காக கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி அவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என்று கூறினார். அமைச்சரின் இந்த பதிலால் கடுப்பான சித்தார்த் அமைச்சர் ஜெயக்குமாரை விளாசி டிவிட்டியிருக்கிறார்.

விருது கொடுக்கவில்லை
அதாவது, அவர் என்னை யார் என்று கேட்கிறார். பிரச்சனையில்லை, 2014 ஆம் ஆண்டு அவருடைய அரசாங்கம்தான் எனக்கு 2014ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது கொடுத்தது. அவர்கள் அதை 2017 இல் அறிவித்தனர், இன்னும் எனக்கு விருது வழங்கவில்லை.
|
நேர்மையாக வந்திருக்கிறேன்
நான் விளம்பரத்திற்காக பேச வேண்டிய தேவையில்லை. நான் சொந்தமாக என்னுடைய இடத்தை சம்பாதித்து வந்திருக்கிறேன். நேர்மையாக. என பதிவிட்டுள்ளார்.
|
விரைவில் குணமடையுங்கள்
மேலும் அக்கறையுடன் பேசும் வரி செலுத்தும் குடிமக்களை அவமதிப்பது உங்களை எங்கேயோ அழைத்து செல்லப்போகிறது பாக்ஸர் அங்கிள். நீங்கள் ஒன்னும் என்னை பெரிய ஆள் ஆக்க தேவையில்லை. உங்கள் வேலையைச் செய்யுங்கள். அது போதும். விரைவில் குணமடையுங்கள். என்று பதிவிட்டிருக்கிறார்.