For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்!

|

சென்னை: லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சிம்பா' கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கிறார் நடிகர் சித்தார்த்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பு 'தி லயன் கிங்' திரைப்படம். ரசிகர்களின் இதயங்களை வென்ற லயன் கிங் படத்தை மீண்டும் உருவாக்கி இருக்கிறது டிஸ்னி.

Actor Siddharth gives voice for the Lion King

'அயர்ன் மேன்' மற்றும் 'தி ஜங்கிள் புக்' புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் 'தி லயன் கிங்' சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

தமிழ் பதிப்பில், சிம்பா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க நடிகர் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். "லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்"என மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்.

ஜான் ஃபேவ்ரூ இயக்கியிருக்கும் 'தி லயன் கிங்' கதை வருங்கால மன்னர் பிறக்கும் ஆப்பிரிக்க சவன்னாவுக்கு பயணிக்கிறது. சிம்பா தனது தந்தை மன்னர் முஃபாசாவை வழிபட்டு, தனது சொந்த அரச விதியை மனதில் கொள்கிறார். ஆனால் ராஜ்யத்தில் உள்ள எல்லோருமே புதிய மன்னரின் வருகையை கொண்டாடுவதில்லை. முஃபாசாவின் சகோதரரரும், சிம்மாசனத்தின் முன்னாள் வாரிசுமான ஸ்கார் வேறு சில திட்டங்களைக் கொண்டுள்ளார்.

பிரைட் ராக் (Pride rock) போரானது துரோகம், சோகம் மற்றும் ட்ராமாவை கொண்டிருக்கிறது, இதன் விளைவாக சிம்பா நாடுகடத்தப்படுகிறது. புதிதாக வந்த நண்பர்களின் உதவியுடன், சிம்பா வளர்ந்து எவ்வாறு தனது உரிமையை கைப்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறது. ஒரு ஹீரோ உருவாகும் பயணம் தான் இந்த மியூசிக்கல் ட்ராமா படத்தை பெரிய அளவில், முன்னோடியான, மிகச்சிறந்த ஃபோட்டோ ரியல் அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரையில் உயிர் பெற்று வர காரணமாக அமைந்திருக்கிறது.

சிம்பாவாக டொனால்ட் குளோவர், நாலாவாக பியோனஸ் நோல்ஸ்-கார்ட்டர், முஃபாசாவாக ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், ஸ்காராக சிவெட்டல் எஜியோஃபர், பம்பாவாக சேத் ரோஜென் மற்றும் டிமோனாக பில்லி ஐச்னர் ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது நடிகர்கள் குழு.

தி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்பில், அயர்ன்மேன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் அது கடுமையான விமர்சனத்துக்கும், கேலி, கிண்டலுக்கும் ஆளானது. தற்போது சிம்பா கதாபாத்திரத்திற்கு சித்தார்த் குரல் கொடுக்கிறார். விஜய் சேதுபதி போல் கிண்டலுக்கு ஆளாகாமல் இருந்தால் சரி தான் என நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.

English summary
Actor Siddharth will be giving voice to the evergreen Simbha character, in the Lion King's tamil version.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more