இந்தியன் 2 படம் முதல்ல ஷங்கருக்காக ஜெயிக்கனும்.. சித்தார்த் சிலிர்ப்பு.. அட இப்படி ஒன்னு இருக்கா!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் இன்னும் ஆறு நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இதற்காக படக்குழுவினரும் சர்வதேச அளவில் படத்தின் பிரமோஷன்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் பிரமோஷன்கள் துபாய், மலேசியா போன்ற இடங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோர் அதிக அளவில் மெனக்கெட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Kamal haasan Siddharth Indian 2 movie Shankar tamil cinema 2

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 படம் இன்னும் ஆறு நாட்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள சூழலில் படம் குறித்த அடுத்தடுத்த பிரமோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக நாளைய தினம் ஹைதராபாத்தில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் ஆகியோர் இணைந்து ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்: முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெயிலர் வெளியீடு ஆகியவை சென்னை மற்றும் மும்பையில் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்து கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் மட்டுமில்லாமல் படத்தின் மற்ற நடிகர் நடிகைகளும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களும் தனித்தனியாக படம் குறித்த தங்களது மகிழ்ச்சிகளையும் சிறப்பான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

சித்தார்த் சிலிர்ப்பு: இந்நிலையில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து பிரம்மாண்டமான ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வரும் சித்தார்த் தனியாகவும் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் டிடியுடன் இணைந்து கொடுத்த பேட்டியில் படத்தின் இயக்குனர் ஷங்கர் குறித்து மெய்சிலிர்த்துள்ளார். ஷங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 மட்டும் இல்லாமல் தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்திலும் செயல்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த், மற்றவர்களுக்காக இந்தியன் 2 படம் ஜெயிப்பதற்கு முன்னதாக ஷங்கருக்காகவே இந்தியன் 2 படம் மிகப்பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷங்கரின் மெனக்கெடல்: இந்த மூன்று படங்களிலும் ஒரே இயங்கி வந்த ஷங்கர், தினந்தோறும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆயிரக்கணக்கானவர்களை ஹேண்டில் செய்த நிலையில் புதிய தொழில்நுட்ப கருவிகளையும் கேமராக்களையும் சிறப்பாக கையாண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவை மிகவும் விலை உயர்ந்தது என்பது மட்டுமில்லாமல், அனைவருக்கும் கிடைக்காத ஒன்று என்றும் கூறியுள்ள சித்தார்த், அவருடைய லவ் மற்றும் பேஷன் மிகப்பெரியது என்றும் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X