Siddharth : பாய்ஸ் படத்தில் அந்த நிர்வாண காட்சி… அலறி ஓடிவிட்டார்கள்.. சித்தார்த் பேட்டி!

சென்னை : பாய்ஸ் படத்தில் அந்த நிர்வாணக் காட்சியைப் பார்த்து பலர் அலறி ஓடினார்கள் என்று நடிகர் சித்தார்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவர் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார்.

Actor siddharth interview about boys movie scene

நடிகர் சித்தார்த் : 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தில் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சித்தார்த்.

டக்கர் : நடிகர் சித்தார்த் தற்போது கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள டக்கர் படத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Actor siddharth interview about boys movie scene

ஜூன் 9ந் தேதி ரிலீஸ் : பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஜூன் 9ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

சித்தார்த் பேட்டி : டக்கர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசி சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், பாய்ஸ் படத்தில் காதலி ஜெனிலியாவை இம்ப்ரஸ் செய்ய ஆடை இல்லாமல் மவுண்ட் ரோடில் ஓடும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சிக்காக இரண்டு விதமான உள்ளாடையை அணிந்து இருப்பேன். இதில் ஒரு ஆடை உடம்போடு அப்படியே ஒட்டி இருக்கும். அதை கழட்டும்போது ஹீரோயின் அம்மா பார்த்து அலறி ஓடிவிட்டார்கள் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X