அதிதி ராவுடன் நிச்சயதார்த்தம்; அஷிகாவுடன் சீரியஸான லவ்; யோகக்கார சித்தார்த் - என்னனு நீங்களே பாருங்க!

By mohanraj

சென்னை: தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன் பின்னர் சங்கரின் பாய்ஸ் படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் சித்தா. ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சுமாராகவே ஓடியது. ஓ.டி.டி.,யில் வெளியான பின்னர் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தள்ளினர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அண்மையில் மிகவும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Actor Siddharth Sivakarthikeyan Madhavan Indian 2 Kamal Haasan

மிஸ் யூ

தனது ஆரம்ப கால சினிமாவில் அதிகப்படியான காதல் படங்களில் நடித்து வந்த சித்தார்த் தொடர்ந்து பல தோல்விகளையும் சந்தித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு லவ்வர் பாயாகவே வலம் வந்தார். ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார். சிவப்பு மஞ்சள் பச்சை, சித்தா போன்ற சீரியசான படங்களில் நடித்து தமிழில் ஒரு சீரியஸான கதாநாயகனாக தன்னை உருவாக்கி வந்த சித்தார்த் தற்போது மீண்டும் முழுக்க முழுக்க ஒரு லவ் ஸ்டோரியில் நடிக்க உள்ளார். மிஸ் யூ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை 7 மையில் பெர் செகண்ட் புரொடக்சன் தயாரிக்க ராஜசேகரன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் போஸ்டரை இன்று அதாவது ஜூன் 6ஆம் தேதி சிவகார்த்திகேயனும் மாதவனும் வெளியிட்டுள்ளனர். போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் "சகோதரர் சித்தார்த்தின் மிஸ் யூ படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Actor Siddharth Sivakarthikeyan Madhavan Indian 2 Kamal Haasan

அதேபோல் போஸ்டர் வெளியிட்ட நடிகர் மாதவன்," சித்தா படத்தின் மூலம் பல்வேறு விருதுகளை குவித்த எனது சகோதரன் சித்தார்த் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு காதல் கதையில் நடிக்க உள்ளார். சாக்லேட் பாய், லவ்வர் மேன் சித்தார்த் மீண்டும் வந்து விட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Actor Siddharth Sivakarthikeyan Madhavan Indian 2 Kamal Haasan

போஸ்ட்டர் எப்படி இருக்கு?

சித்தார்த் டிராவல் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனில் இருப்பது போன்று போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு நிற பேக்ரவுண்டில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான ஓ2 படத்தின் மூலம் கவனம் பெற்ற அஷிகா ரங்கநாத் மிஸ் யூ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கருணாகரன், லொள்ளு சபா மாறன், கலக்கப்போவது யாரு பாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

Actor Siddharth Sivakarthikeyan Madhavan Indian 2 Kamal Haasan

சித்தார்த்துக்கு டும்..டும்..டும்..

சித்தார்த்துக்கும் நடிகை ஆதிதி ராவுக்கும் இடையே இருந்த காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருவருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுகுறித்த தகவலை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இருவரும் திருமணம் முடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் சித்தார்த் மிஸ் யூ படத்தில் கமிட்டாகி உள்ளார்.

Actor Siddharth Sivakarthikeyan Madhavan Indian 2 Kamal Haasan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X