Actor Siddharth: எங்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்கவில்லை.. நடிகர் சித்தார்த் காட்டம்!
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களில் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம், அருண்குமார் இயக்கத்தில் ரிலீசாகி மாஸ் காட்டியது. இந்த படத்தில் சித்தார்த்திற்கும் அவரது அண்ணன் மகளுக்குமான நெகிழ்ச்சிப் பிணைப்பு கதைக்களமாக அமைந்திருந்தது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தை சித்தார்த்தே தயாரித்திருந்தார்.
இந்தப்படம் குறித்து முன்னதாக கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்திருந்த சூழலில் படம் ரிலீசாகி ரசிகர்களின் பாராட்டுகளையும் குவித்தது. இதனிடையே அதிதி ராவுடனான நீண்ட கால காதல் தற்போது சித்தார்த்திற்கு கைக்கூடியுள்ளது. சமீபத்தில் அதிதியுடனான நிச்சயதார்த்தம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் சித்தார்த்.

நடிகர் சித்தார்த்: நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுடன் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அதகளம் செய்து வருகிறார் சித்தார்த். சமீப காலங்களில் இவர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அருண்குமார் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சித்தா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை சித்தார்த்தே தயாரித்த சூழலில் அவருக்கு தயாரிப்பாளராகவும் இந்த படம் சிறப்பாக கை கொடுத்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே நீண்ட நாட்களாக இவர் நடிகை அதிதி ராவை காதலித்து வந்தார்.
சித்தார்த் -அதிதி நிச்சயதார்த்தம்: இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே சுற்றி திரிந்த போதிலும் தங்களது காதலை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென இவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்தம் இருதரப்பினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து தான் நிச்சயம் செய்து கொண்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார் சித்தார்த். அவர் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக பல்வேறு கமெண்ட்கள் எழுந்தன. இது குறித்து இதுவரை எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார் சித்தார்த்.
ரகசியமாக நடக்கவில்லை: தற்போது தங்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்கவில்லை என்றும், ரகசியம் என்பதற்கும் பிரைவேட் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதாகவும் சித்தார்த் காட்டமாக பேசியுள்ளார். தங்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தங்களது நிச்சயதார்த்தம் தனிப்பட்ட முறையில் நடந்ததாகவும் கூறியுள்ளார். திருமணம் குறித்து அனைவரும் தொடர்ந்து கேட்டு வருவதாகவும் உடனடியாக நடைபெற அது பட ரிலீஸ் கிடையாது என்றும் திருமண தேதியை பெரியவர்கள் இணைந்து முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சித்தா படம்: பல்வேறு ஜானர்களில் படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் அவரது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியது. தன்னுடைய அண்ணன் மகளுக்கும் தனக்குமான உறவை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் மிகவும் நெகிழ்ச்சியான காட்சி அமைப்புகளுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இதே போன்ற அழுத்தமான கதைக்களங்களில் அவர் நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











