Siddharth: பண்ணா டைரக்ஷன்தான்னு சொன்னான்.. ஆனா இப்ப.. கார்த்தியை கலாய்த்த சித்தார்த்!
சென்னை: நடிகர் சித்தார்த் உதவி இயக்குநராக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார். ஒரு கட்டத்தில் பாய்ஸ் படம் மூலம் ஹீரோவாக மாறிய இவர், நடிப்பை தொடர்ந்து வருகிறார். தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அதிதி ராவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் யூ படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதன் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டதை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

நடிகர் சித்தார்த்: நடிகர் சித்தார்த் அடுத்தடுத்த கவனம் ஈர்க்கும் படங்களில் தன்னை இணைத்து வருகிறார். கடந்த ஆண்டில் எஸ்யூ அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருந்த சித்தா படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. தயாரிப்பாளராகவும் இந்தப் படம் அவருக்கு கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் சித்தார்த் இணைந்திருந்த இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக மிஸ் யூ படம் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
மிஸ் யூ படம்: ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளார். இன்னும் சில தினங்களில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலத்திலேயே நடிகர் சித்தார்த் படங்களில் நடிக்க துவங்கிவிட்டதாகவும் ஆனாலும் உதவி இயக்குநராக அடுத்தடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தி மணிரத்னத்தையே கடுப்பேற்றியதாகவும் சித்தார்த்தை கலாய்த்தார்.
கார்த்தியை கலாய்த்த சித்தார்த்: இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சித்தார்த், நைட் சூட்டிங்கை வைத்துக் கொண்டு தனக்காக இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தான் நடித்தபோது அசிஸ்டெண்ட்டாக இயங்கியது குறித்து கார்த்தி அதிகமான கதைகளை கூறியதாக பேசிய சித்தார்த், ஆனால் அங்கு நடந்த முக்கியமான விஷயத்தை கார்த்தி கூறாமல் விட்டுவிட்டதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் கார்த்தியை அழைத்து, டேய் நீயும் என்னை போல நடிகனாகத்தானே ஆகப் போகிறாய் என்று தான் கூறியதாகவும் அதற்கு கார்த்தி, அப்படியெல்லாம் ஆகமாட்டேன் என்றும் தான் focusedஆக இருப்பேன் என்றும் பண்ணா டைரக்ஷன்தான் என்றும் உறுதியாக கூறியதாகவும் சித்தார்த் சீக்ரெட் பகிர்ந்துள்ளார்.
கார்த்திக்கு அட்வைஸ்: இதையடுத்து பருத்திவீரன் படத்தின் கார்த்தி நடித்த நிலையில் தான் அவருக்கு போன் செய்ததாகவும் ஆனால் எடுக்கவில்லை என்றும் சித்தார்த் தொடர்ந்து பேசியுள்ளார். தொடர்ந்து கால் போட்ட நிலையில் போனை கார்த்தி எடுத்ததாகவும் டைரக்ஷன் குறித்து அவர் கொடுத்த பில்டப்பை சுட்டிக் காட்டி கலாய்த்ததாகவும் சித்தார்த் குறிப்பிட்டார். தொடர்ந்து ஒழுங்கா நடி, நல்ல நடிகனாக பேர் வாங்கு என்று தான் அட்வைஸ் கொடுத்ததையும் நினைவுகூர்ந்துள்ளார். அன்று முதல் தற்போதுவரை தங்களின் நட்பு மாறவில்லை என்றும் கார்த்தி மீதான நம்பிக்கை மரியாதை குறையவில்லை என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள மெய்யழகன் படத்தையும் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











