Actor Siddharth: ஜெனிலியா என்னோட பேமிலி மாதிரி.. உருகிய சித்தார்த்!
சென்னை: நடிகர் சித்தார்த் அடுத்தடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். சாக்லேட் பாயாகவே இவரது சினிமா பயணம் துவங்கியது. தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் மிகப்பெரிய பாராட்டுக்களை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சித்தார்த்தின் ஆரம்ப கால படங்களில் திரிஷா, ஜெனிலியா போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர், பின்னணி பாடகர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முகங்களுடன் திரைத்துறையில் செயல்பட்டு வருகிறார் சித்தார்த். அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் உதவி இயக்குநராக செயல்பட்ட சித்தார்த், பின்பு கடந்த 2004ம் ஆண்டில் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் லீட் கேரக்டரில் திரிஷா ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் சித்தார்த்: நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா படம் மிகப்பெரிய வரவேற்பையும் அதிர்வுகளையும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் உதவி இயக்குநராக இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டில் பாய்ஸ், தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான ஆயுத எழுத்து படத்திலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் இந்தப் படம் யுவா என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசானது.
பன்முகம் காட்டும் சித்தார்த்: தொடாந்து திரைக்கதை எழுத்தாளராகவும் பின்னணி பாடகராகவும் சிறப்பாக இயங்கி வருகிறார் சித்தார்த். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்துவரும் சித்தார்த், பாலிவுட்டில் அமீர்கானுடன் இணைந்து ரங் தே பசந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெனிலியா மற்றும் திரிஷாவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் பேட்டியொன்றில் இவர்களில் பிடித்தமான நடிகை குறித்து சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சித்தார்த், ஜெனிலியா தன்னுடைய பேமிலியில் ஒருவர் போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.

ஜெனிலியா குறித்து சித்தார்த் உருக்கம்: தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தினருக்கும் அவர் மிகச்சிறந்த பிரெண்ட் என்றும் சித்தார்த் கூறியுள்ளார். தன்னுடைய பிறந்தநாளுக்கு யார் போன் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஜெனிலியா கண்டிப்பாக பிறந்தநாள் வாழ்த்து கூறுவார் என்றும், அவரது வாழ்த்து இல்லாமல் தன்னுடைய பிறந்தநாள் முழுமையடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் அவர் மிகவும் முக்கியமானவர் என்றும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னுடைய பேவரிட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சித்தா படம்: சமீபத்தில் வெளியான சித்தா படத்தில் தன்னுடைய பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார் சித்தார்த். இந்தப் படத்தில் அப்பா இல்லாத தன்னுடைய அண்ணன் மகளுக்கு, அப்பாவாக, சிறப்பான அன்பை கொடுப்பவராக அவர் மாஸ் காட்டியிருந்தார். முன்னதாக இந்தப் படத்தின் ரிலீசையொட்டி நடிகர் கமல்ஹாசனும் படத்திற்காக தன்னுடைய பிரத்யேக பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் சித்தார்த்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











