Siddharth: நடிகரானதால Wine Shopக்கு போக முடியலை.. சித்தார்த் வருத்தம்!

சென்னை: நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர்.

இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் சித்தா என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

பழனி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினருடன் பழனியில் சாமி தரிசனம் செய்திருந்தனர் சித்தார்த்.

Actor Siddharth revealed that what he missed after acting

நடிகரானதால் Wine shopக்கு போக முடியவில்லை என சித்தார்த் வருத்தம்: நடிகர் சித்தார்த், இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தன்னுடைய பயணத்தை துவக்கியவர். தொடர்ந்து ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை சரியாக பயன்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்தி கொண்டார் சித்தார்த். அடுத்ததாக அவரது நடிப்பில் சித்தா என்ற படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் குறித்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனும் சிறப்பான விமர்சனங்களை பதிவு செய்திருந்தார்.

பழனியில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற்ற நிலையில் படத்தின் வெற்றிக்காக வேண்டி, பழனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினருடன் சாமி தரிசனம் செய்தார் சித்தார்த். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சித்தப்பா மற்றும் ஒரு பெண்குழந்தைக்கு இடையிலான உறவை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், குடும்ப சென்டிமெண்ட் மற்றும் குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பேட்டியொன்றில் அவரிடம் நடிகராக மாறியதால் எந்த இடங்களுக்கு போக முடியவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Actor Siddharth revealed that what he missed after acting

இதற்கு பதிலளித்த சித்தார்த், நடிகராவதற்கு முன்னதாக தான் சாப்பிட்ட கையேந்தி பவன்களில் தற்போதும் சாப்பிடுவதாகவும் பிடித்த கடைகளுக்கு சென்று ட்ரஸ் எடுப்பது போன்றவற்றை எல்லாம் தன்னால் தற்போதும் செய்ய முடிவதாகவும் ஆனால் உதவி இயக்குநராக இருந்தபோது அடிக்கடி சென்ற Wine Shopகளுக்கு தற்போது தன்னால் போக முடியவில்லை என்றும் அது ஒன்றுதான் வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ளார் சித்தார்த். முன்னதாக அவரது டக்கர் படம் வெளியான நிலையில் தற்போது சித்தா படம் ரிலீசாகவுள்ளது. அவரது பெயரையொட்டி இந்தப் படத்தில் டைட்டில் அமைந்துள்ளதாகவும் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை ஏற்றுக் கொண்டுள்ள சித்தார்த், ஆனால் சித்தப்பா என்பதில் சுருக்கமாகவே சித்தா என்ற டைட்டில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார். அடுத்ததாக ஷங்கர் -கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் சித்தார்த் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X