தாறுமாறான சம்பவங்கள் அடங்கிய கம்மார சம்பவம்... ஜியோ சினிமாவில் வெளியீடு

சென்னை : நடிகர்கள் திலீப்குமார், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018ல் வெளிவந்த மலையாள படம் கம்மார சம்பவம்.

நடிகர் சித்தார்த்திற்கு இந்த படம் முதல் மலையாள படமாக அமைந்தது. நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் இந்த படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளதாகவும் ரசிகர்களின் தொடர்ந்த ஆதரவு வேண்டுமென்றும் நடிகர் சித்தார்த் கோரியுள்ளார்.

கம்மார சம்பவம் படம்

கம்மார சம்பவம் படம்

நடிகர்கள் திலீப்குமார், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பில் கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் வெளியான மலையாள படம் கம்மார சம்பவம். புதுமுக இயக்குநர் ரதீஷ் அம்பட் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பல்வேறு அதிர்வலைகளை மலையாள சினிமாவில் ஏற்படுத்தியது.

கேவலமான பிளாஷ்பேக்

கேவலமான பிளாஷ்பேக்

கேவலமான பிளாஷ்பேக்கை கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவனின் வாழ்க்கையை சினிமா என்னும் ஆயுதத்தை கொண்டு சரித்திரமாக மாற்ற முடியும் என்ற கதைக்களத்தில் வந்த இந்த படத்தல் 3 விதமான கெட்டப்புகளில் திலீப்குமார் வாழ்ந்திருந்தார்.

சித்தார்த்தின் முதல் படம்

சித்தார்த்தின் முதல் படம்

இந்த படத்தின்மூலம் மலையாளத்தில் அறிமுகமான சித்தார்த்திற்கும் இந்த படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. டைரக்டராக வரும் பாபி சிம்ஹாவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். சுனில் கேஎஸ்ஸின் ஒளிப்பதிவு மற்றும் சுரேஷின் கிராஃபிக்ஸ் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை நம் கண்முன்னே கொண்டுவந்தது.

சித்தார்த் கோரிக்கை வீடியோ

கோபி சுந்தரின் இசை படத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ஜியோ சினிமாவில் ரிலீசாகியுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றின் மூலம் பேசியுள்ள நடிகர் சித்தார்த், தன்னுடைய அறிமுக படமான கம்மார சம்பவம் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவை கோரியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X