அயலான் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்த சித்தார்த்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சிவாகர்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகயேன் முதன்முதலாக நடிக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் படம் அயலான். இந்த படத்தில் ஒரு வேற்றுகிரக ஏலியன் ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம் தான் அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ரகுல் பிரீத் சிங் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் 5 வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டன. ஆனால், சில காரணங்களுக்காக பல ஆண்டுகளாக படத்தை வெளியிட முடியவில்லை.

இதையடுத்து,பல பிரச்சனைகளை தாண்டி படம் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 12ந் தேதி வெளியானது. படம் வெளியான போது, படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமே வந்தன. ஆனால், குழந்தைகளை கவரும் வகையில் இந்த படத்தில் ஏலியன் இருப்பதால், இந்த படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் அயலான்: அயலான் படத்தில் சிவாகர்த்திகேயனுடன் படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டர்தான் அந்த ஏலியன். இந்த கதாப்பாத்திரத்திற்கு பிரபல நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்துள்ளார். சித்தார் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சித்தா பட ஹீரோவான சித்தார்த், நடிப்பை தவிர சினிமா துறையில் பல வித்தை தெரிந்தவர். ஆரம்ப காலத்தில் விளம்பரத்திற்கு வாய்ஸ் கொடுத்துதான் சித்தார்த் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்ந்து கொண்ட சித்தார்த், சந்தோஷ் சுப்புரணியம் படத்தில் வரும் அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் பாடலை பாடி பாடகர் ஆனார்.
சித்தார்த் வாங்கிய சம்பளம்: இது மட்டுமல்ல, 2019ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங் படத்தில் வளர்ந்த் சிம்பாவிற்கு வாய்ஸ் கொடுத்ததும் இவர்தான். தற்போது அயலான் படத்தில் வரும் ஏலியானுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கும் சித்தார்த், இதற்கு சம்பளம் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில், கடவுளில் குரல் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும், அந்த கடவுள் குரல் கொடுத்தது விஜய் சேதுபதி தான். அவரும் அந்த படத்திற்கு சம்பளமே வாங்கவில்லையாம். இப்படி, சிவகார்த்திகேயனுக்கு ஒன்று என்றால், உடன் இருக்கும் பெரிய நடிகர்கள் உதவி செய்வது ரசிகர்களை மகிழ்ச்சிப்பட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











